'வலிமை' தயாரிப்பாளர் வீடு வரை வந்த கொரோனா.. பதறிப் போன திரையுலகம்.. அவசர அவசரமாக அறிக்கை வெளியீடு
மும்பை: தயாரிப்பாளர் போனி கபூரின் வீட்டில் வேலை செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான செய்தி திரையுலகில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
Recommended Video
மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல தயாரிப்பாளரும் ஆன போனி கபூர், தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து இருந்தார்.
தற்போது, மீண்டும் இயக்குநர் எச். வினோத், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார்.

மும்பை வீடு
மும்பை அந்தேரியில் உள்ள லோகந்த்வாலா காம்ப்ளெக்ஸில் க்ரீன் ஏக்கர்ஸ் எனும் இடத்தில் உள்ள வீட்டில் தனது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூருடன் தயாரிப்பாளர் போனி கபூர் வசித்து வருகிறார். லாக்டவுன் தொடங்கியது முதல் இதுவரை வீட்டை விட்டு யாரும் வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பணியாளருக்கு கொரோனா
இந்நிலையில், கடந்த மே 16ம் தேதி போனி கபூர் இல்லத்தில் வேலை பார்த்து வரும் 23வயது பணியாளரான சரண் சாஹுவுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட, அவரை மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்க அனுப்பி உள்ளார் போனி கபூர். மருத்துவமனையில் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் பணியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

திரைத்துறையினர் பரபரப்பு
பாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்தியா முழுவதும் பல படங்களை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் வீடு வரை கொரோனா வைரஸ் பரவிய தகவல் அறிந்ததும் போனி கபூர் மற்றும் அவரது மகள்களுக்கு என்ன ஆனது என திரைத்துறையினர் பரபரப்பாக விசாரிக்கத் தொடங்கி உள்ளனர்.

நலமாக இருக்கிறோம்
இந்நிலையில், இதுகுறித்த அறிக்கை ஒன்றை தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் வீட்டு பணியாளர் ஒருவருக்கு கொரொனா பாசிட்டிவ் ஆனது உண்மை தான். அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தனக்கும் தன் மகள்களுக்கும் கொரோனா அறிகுறி ஏதும் இல்லை.

உறுதியாக இருக்கிறோம்
இருந்தாலும், எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். விரைவில் அந்த பணியாளர் குணமாகி மீண்டும் எங்கள் வீட்டிற்கு வருவார் என்பதில் உறுதியாக இருக்கிறோம் எனக் கூறியுள்ளார். போனி கபூரின் இந்த அறிக்கையை தொடர்ந்து பல பிரபலங்களும் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர். ரசிகர்கள் தங்களின் பிரார்த்தனைகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











