தியேட்டரா.. அமேசானா.. நேரடியாக ஆன்லைனில் வெளியாகிறதா வலிமை? போனி கபூர் கொடுத்த அதிரடி அப்டேட்!

சென்னை: தல அஜித்தின் வலிமை படம் நேரடியாக ஆன்லைனில் வெளியாகுமா என்ற கேள்விக்கு விளக்கம் கொடுத்துள்ளார் போனி கபூர்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் படங்கள் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகின.

தொடர்ந்து, லாக்டவுன் நீடித்தால், பல பெரிய படங்களும், வேறு வழியில்லாமல், ஆன்லைனில் வெளியாகும் நிலை தான் உருவாகும் என பலரும் கணித்து வருகின்றனர்.

நம்பும் நாயகர்கள்

நம்பும் நாயகர்கள்

இந்த கொரோனா பரவல் குறைந்து மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படும் என நடிகர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நம்பிக்கையுடன் முழுவதும் ரெடியான நிலையிலும், தங்கள் படங்களை ஆன்லைனில் வெளியிடாமல் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

தீவிரமாகும் கொரோனா

தீவிரமாகும் கொரோனா

ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதைக்கு, இந்தியாவில் குறையும் என்ற நம்பிக்கையே பலருக்கும் போய் விட்டது. அந்த அளவுக்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் போட்ட முழு ஊரடங்கு, தற்போது பல மாவட்டங்களுக்கும் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் படம்

அஜித் படம்

இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தல அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங்கும் கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே நிற்கின்றது. வெளிநாடுகளில் எடுக்க திட்டமிட்டு இருந்த பைக் ரேஸ் காட்சிகளையும் எப்படி எடுக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் படக்குழு உள்ளது.

வளரும் OTT

வளரும் OTT

தியேட்டர்கள் திறப்பு என்பது எப்போது என்று தெரியாத நிலையில், தொடர்ந்து ஆன்லைனில், நாடு முழுவதும் பல பெரிய படங்கள் ரிலீஸ் செய்ய காத்திருக்கின்றன. அக்‌ஷய் குமாரின் லக்‌ஷ்மி பாம் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஆன்லைனில் வெளியிட தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் படங்களை தொடர்ந்து வரலக்‌ஷ்மி சரத்குமாரின் டேனி நேரடியாக ஆன்லைனில் வெளியாகிறது.

Recommended Video

Penguin தொடர்ந்து அடுத்த OTT Release Danny | Varalakshmi Sarathkumar
தியேட்டரா? அமேசானா?

தியேட்டரா? அமேசானா?

இந்நிலையில், தல அஜித்தின் வலிமை திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகுமா இல்லை தியேட்டர் ரிலீஸா என்ற கேள்விக்கு, தயாரிப்பாளர் போனி கபூர், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக, நிச்சயம் வலிமை திரைப்படம் முதலில் தியேட்டரில் தான் வெளியாகும் என்றும், லாக்டவுனுக்கு பிறகு, மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X