ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியாகும் வலிமை.. அம்மா பாசம் ஏகப்பட்ட இடங்களில் கனெக்ட் ஆகுதே?

சென்னை: போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ள வலிமை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளும் நாளை கொண்டாடப்படும் நிலையில், இரண்டுக்கும் இடையே அம்மா சென்டிமென்ட் கனெக்ட் ஆவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வலிமை படத்திலும் அம்மா சென்டிமென்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

வலிமை ரிலீஸ்

வலிமை ரிலீஸ்

அஜித் ரசிகர்களுக்கான அட்டகாசமான படமாக உருவாகி உள்ள வலிமை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கடந்த ஆண்டு மே மாதம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பல முறை கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நாளை வெளியாகிறது.

ஜெயலலிதா பிறந்தநாள்

ஜெயலலிதா பிறந்தநாள்

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியே நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வெளியாகிறது. இரண்டுக்கும் இடையே 'அம்மா பாசம்' சரியான கனெக்ட் ஆக இருக்கிறதே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அம்மா பாடல்

அம்மா பாடல்

பைக் ரேஸ், ஆக்‌ஷன், ஆகாயத்தில் அதிரடி சண்டை என வலிமை பட காட்சிகள் அதகளம் செய்வதற்கு இடையில், அஜித் குமாரின் அம்மா பாச பாடலும் ரசிகர்களை வருடி வருகிறது. சின்ன குழந்தையாக இருந்தது முதல் ஏசிபி ஆனது வரை அம்மாவுடன் இருக்கும் தருணங்களை நினைத்து அஜித் உருகும் அம்மா பாடல் வலிமை படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டிரெண்ட் ஆகுது

டிரெண்ட் ஆகுது

வலிமை படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய "நான் பார்த்த முதல் முகம் நீ" என தொடங்கும் அம்மா பாடல் புரமோவையும் தயாரிப்பாளர் போனி கபூர் ஷேர் செய்துள்ள நிலையில், அந்த பாடலை ஏகப்பட்ட அதிமுகவினரே அதிகளவில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர். வலிமை படம் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் காத்திருக்கு என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X