வெளியானது வலிமை.. ரசிகர்களுடன் படம் பார்த்த போனி கபூர், ஹூமா குரேஷி, கார்த்திகேயா.. வேறமாறி FDFS!
சென்னை: ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்து அப்டேட்டுக்காக பல முறை கெஞ்சி ரிலீஸ் தேதி கொரோனா பரவல் காரணமாக மாற்றப்பட்டு, நடிகர் அஜித் குமார் விபத்தில் சிக்கி என பல தடைகளை கடந்த நிலையில், நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! என கெத்தாக இன்று வெளியாகி இருக்கிறது வலிமை திரைப்படம்.
Recommended Video
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி ஆரம்பம் ஆகி விட்டது.
அஜித் ரசிகர்கள் நள்ளிரவு ஒரு மணி முதலே தியேட்டர்களில் வலிமை FDFS கொண்டாட்டத்தை தெறிக்கவிட்டுள்ளனர்.

வெளியானது வலிமை
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், கார்த்திகேயா, ஹூமா குரேஷி நடிப்பில் அசுரத்தனமாக உருவாகி உள்ள வலிமை திரைப்படம் இன்று வெளியானது. வலிமை படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு வெறும் 10 நிமிடங்களிலேயே பல திரையரங்குகளில் முதல் நாளுக்கான டிக்கெட்டுகளே விற்றுத் தீர்ந்தன.

கேபி முதல் ரோஷ்னி வரை
அரபிக் குத்து பாடலுக்கு பிரபலங்கள் நடனமாடி வீடியோக்களை போட்டு வந்த நிலையில், வலிமை படத்தின் வெளியீட்டை முன்னிட்டு கடற்கரையில் இருந்தபடி ஒரு வேறமாறி வீடியோவை ஷிவானி நாராயணன் ஷேர் செய்திருந்தார். பிக் பாஸ் கேபி, குக் வித் கோமாளி ரோஷ்னி ஹரிப்ரியன் உள்ளிட்ட பலர் வேறமாறி பாடலுக்கு நடனமாடி இன்று முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தயாராக உள்ளோம் என பதிவிட்டு இருந்தனர்.

FDFS கொண்டாட்டம்
இன்றைய தினம் வியாழக் கிழமை இல்லை என்றும் வலிமை டே என்றும் ரசிகர்கள் தியேட்டர்களில் வலிமை திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க பைக் ஸ்டன்ட்டுகள் பறக்க ஒவ்வொரு தியேட்டருக்கு முன்பாகவும் நடிகர் அஜித் ரசிகர்கள் வெறித்தனம் காட்டி வருகின்றனர்.

அஜித் குமார் டைட்டில்
அதிகாலை 4 மணிக்கு வலிமை திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், நடிகர் அஜித் குமாரின் பெயர் திரையில் தோன்றியதும் ரசிகர்கள் எழுந்து நின்று தொண்டைக் கிழிய கத்தி, விசில் அடித்து தியேட்டரையே தெறிக்கவிட்டு விட்டனர். ஏகப்பட்ட பிரபலங்களும் FDFS காட்சியை பார்க்க தியேட்டருக்கு விரைந்துள்ளனர்.

சென்னையில் போனி கபூர்
வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் ஒன்றாக அமர்ந்து வலிமை படம் பார்த்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் வந்த காரையே சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர். மேலும், வலிமை படத்தின் படக்குழுவினரும் அவருடன் இணைந்து படம் பார்த்து வருகின்றனர்.

நாயகியும் வில்லனும்
வலிமை படத்தில் நாயகியாக நடித்துள்ள பாலிவுட் ஹீரோயின் ஹூமா குரேஷி நேற்றே தன்னுடன் சென்னையில் யாரெல்லாம் வலிமை பார்க்க காத்திருக்கீங்க என ட்வீட் போட்டிருந்தார். இந்நிலையில், வலிமை பட வில்லன் மற்றும் ஹூமா குரேஷி ரசிகர்களுடன் இணைந்து வலிமை படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அது மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications