வந்தாச்சு அடுத்த அப்டேட்… இனி ஒரே கொண்டாட்டம் தான் … தட்டி தூக்க போகுது வலிமை !

சென்னை : வலிமை திரைப்படத்தின் பட்டையை கிளப்பும் வகையில் புது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

இந்தப்ரோமோவை பார்த்த அஜித்தின் ரசிகர்கள் தலை கால் புரியாமல் குஷியாகி உள்ளனர்.

வலிமை திரைப்படம் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி உள்ளது.

வலிமை

வலிமை

நடிகர் அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் தயாராகி உள்ளது. கொரோனா பரவலால் இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தது. இதனால், வலிமை அப்டேட் வேண்டும் என அஜித் ரசிகர்கள் இணைத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். ஒரு வழியாக படப்பிடிப்பு முடிவடைந்து படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். அண்மையில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

எகிறிய எதிர்பார்ப்பு

எகிறிய எதிர்பார்ப்பு

அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பால் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும், தெலுங்கும் இந்தி, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி மிரட்டி இருந்தது.

ஒரே

இந்நிலையில், வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்யும் வகையில் அட்டகாசமான புது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் திரைப்படம் வலிமை என்றும் தமிழ்,தெலுங்கு, இந்தி,கன்னடம் என 4 மொழிகளிலும் ஒரே நேரத்தில் பிப்ரவரி 24ந் தேதி வலிமை திரைப்படம் வெளியாகும் என்றும் அந்த வீடியோவில் மாஸ் அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X