நான் பார்த்த முதல் முகம் நீ.. அம்மா பாசத்தை பொழிய தயாரான அஜித்.. வலிமை 2வது சிங்கிள் புரமோ ரிலீஸ்!

சென்னை: வலிமை படத்தின் இரண்டாவது பாடலான அம்மா பாடல் புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

'தல' என இனி சொல்ல வேண்டாம் என நடிகர் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், தற்போது ஆறுதலாக தாலாட்டு பாடல் புரமோவை வலிமை படக்குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர்.

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே பொங்கல்

ஏகே பொங்கல்

இனி தல பொங்கல் என ரசிகர்கள் கொண்டாட முடியாத அளவுக்கு அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நடிகர் அஜித் ஏகே பொங்கல் என்று தான் ரசிகர்கள் ட்விட்டரை இனி தெறிக்க விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேற மாறி

வேற மாறி

எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் வெளியான முதல் பாடலான வேற மாறி பாடல் வேற மாறி ஹிட் அடித்து இணையத்தை தெறிக்கவிட்டது.

அம்மா பாடல்

அம்மா பாடல்

இந்நிலையில், அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக செகண்ட் சிங்கிள் வரும் டிசம்பர் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அதன் அசத்தலான புரமோ வீடியோவை தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் வரிகளில்

விக்னேஷ் சிவன் வரிகளில்

முதல் பாடலை போலவே இரண்டாவது பாடலான அம்மா பாடலியும் விக்னேஷ் சிவன் தான் எழுதி உள்ளார். அவரது வரிகளில் அழகான பாடலாக இந்த பாடல் உருவாகி உள்ளது. சித் ஸ்ரீராம் குரலில் உருக வைக்கும் ஃபிளாஷ்பேக் மெலடி பாடலாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான் பார்த்த முதல் முகம் நீ

"நான் பார்த்த முதல் முகம் நீ.. நான் கேட்ட முதல் குரல் நீ" என விக்னேஷ் சிவனின் அருமையான வரிகளில் உருவாகி உள்ள அம்மா பாடலின் புரமோ வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் வலிமை திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வைக்க அஜித் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் சித் ஸ்ரீராம் குரலில் வெளியான கண்ணான கண்ணே பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அதே போல இந்த அம்மா பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் முதல் ரஜினி, எஸ்.ஜே. சூர்யா வரை எந்த நடிகராக இருந்தாலும் அம்மா பாடல் வந்தால் அதற்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X