லீக்கான வலிமை படப்பிடிப்பு காட்சி.. வேற லெவலில் டிரெண்டாகும் #HVinoth.. சென்னையில் தான் ஷூட்டிங்!
சென்னை: தல அஜித்தின் வலிமை திரைப்பட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் எச். வினோத் இருக்கும் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.
விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவுபெற உள்ள நிலையில், சென்னையில் தற்போது ஷூட்டிங் நடந்து வருகிறது.

சென்னையில் ஷூட்டிங்
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் கடைசி கட்ட ஷூட்டிங் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது #HVinoth என்ற ஹாஷ்டேக் உடன் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகளை வைரலாக்கி வருகின்றனர்.
லீக்கான புகைப்படங்கள்
சென்னையில் வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், தல ரசிகர்கள், தங்கள் மொபைல் போனில் எடுத்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் கசியவிட்டு வைரலாக்கி வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் பைக் ரேஸ் ஷூட்டிங் நடைபெற்ற போதும் ஏகப்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் கசிந்தன.
மொட்டை தல
முன்னதாக லீக்கான புகைப்படங்களில் அதிக முடியுடன் காணப்பட்ட இயக்குநர் எச். வினோத், தற்போது கசிந்துள்ள போட்டோக்களில் மொட்டை தலையுடன் காணப்படுகிறார். சென்னையில் சில பேட்ச் வொர்க்குகளுக்கான ஷூட்டிங் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், அஜித் கலந்து கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொராக்கோவில் 13 நாட்கள்
வலிமை படத்தின் இறுதி கிளைமேக்ஸ் காட்சியை மொரோக்கோவில் கிட்டத்தட்ட 13 நாட்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் வலிமை ஷூட்டிங் முழுமையடைந்து விடும் என்றும் கூறி வருகின்றனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், கூடிய விரைவில் ஃபர்ஸ்ட்லுக், டீசர் உள்ளிட்ட கொண்டாட்டங்கள் தல ரசிகர்களை குதூகலப்படுத்தும் என்பது கன்ஃபார்ம்.

அஜித் போட்டோ லீக்
சமீபத்தில் ரசிகர்களுடன் வலிமை பட கெட்டப்பில் தல அஜித் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி டிரெண்டாகின. ஆனால், இதுவரை ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் இருக்கும் எந்தவொரு புகைப்படத்தையும் வெளியே கசியவிடாமல் இயக்குநர் வினோத் மற்றும் அவரது குழு பயங்கர எச்சரிக்கையுடன் பணியாற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications











