ஜோர்டானில் சிக்கிய பிருத்விராஜ் டீம்.. சத்தம் போடாமல் திட்டத்தை மாற்றிய அஜித்தின் வலிமை படக்குழு!
சென்னை: ஜோர்டானில் நடத்த இருந்த படப்பிடிப்பை, வலிமை படக்குழு மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது.
Recommended Video
நடிகர் அஜித் இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து இந்தப் படத்தையும் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். ஶ்ரீதேவியின் கணவரும் இந்திப் பட தயாரிப்பாளருமான, போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹூமா குரேஸி
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. பின்னர் படக்குழு சென்னைத் திரும்பியது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

வில்லன்
இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே நவ்தீப் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இவர் அஜித்துடன் ஏற்கனவே ஏகன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 100 படத்தில் அதர்வாவுக்கு வில்லனாக நடித்த ராஜ் ஐயப்பா இதிலும் வில்லனாகிறார் என்றும் செய்திகள் வெளியானது.

நள்ளிரவு வரை
இந்த படத்துக்காக, கடந்த சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டது. அப்போது இயக்குனர் உட்பட பலர் ரெஸ்ட் எடுக்குமாறு கூறியும் மறுத்துவிட்ட அஜித், காயத்துடனேயே நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் கலந்துகொண்டு முடித்துக் கொடுத்தார் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

வெளிநாட்டு ஷெட்யூல்
கொரோனா வைரஸ் காரணமாக, பல படங்களின் வெளிநாட்டு ஷெட்யூல் தடைபட்டுள்ள நிலையில், வலிமை படத்தின் முக்கியமான காட்சியை ஸ்பெயினில் படமாக்க முடிவு செய்திருந்தனர். அங்கு கொரோனா தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால், அதை விட்டுவிட்டு, ஜோர்டானில் படமாக்க முடிவு செய்திருந்தார்களாம்.

ஜோர்டான்
இதற்காக மே மாதத்தில் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார்களாம். இந்நிலையில், பிருத்விராஜ் நடிக்கும் ஆடுஜீவிதம் படக்குழுவை சேர்ந்த 58 பேர், ஜோர்டானில் சிக்கி உள்ளனர். அங்கு ஷூட்டிங்கிற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எப்போது அனுமதி கொடுப்பார்கள் என்று தெரியாது என்பதால், வலிமை படக் குழு தனது திட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











