அதிரடியாக குறைந்து போன வலிமை புக்கிங்.. கத்தரிக்க முடிவு செய்த படக்குழு.. எவ்ளோ நேரம் தெரியுமா?

சென்னை: வலிமை படத்தின் இரண்டாம் பாதியை பார்த்த ரசிகர்கள் ஷப்பா.. முடியல என புலம்ப ஆரம்பித்த நிலையில், அதன் நீளத்தை கத்தரிக்க வலிமை படக் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் குமார் அட்டகாசமாக ஆக்‌ஷன் மற்றும் பாசம் என அசத்தி உள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கத்தியை இப்படி பிடிக்கணும் என கற்றுக் கொடுத்து பாவரியா கேங்கை காட்டி கொலை நடுங்க செய்த எச் வினோத் அஜித்தை வைத்து காப் ஸ்டோரி பண்ணுகிறார் என்றதுமே அந்த பாம்பு கை விரல் காட்சியெல்லாம் ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்து சென்றது.

எதிர்பார்த்தது இல்லை

எதிர்பார்த்தது இல்லை

மட்டன் பிரியாணி சாப்பிட முடிவெடுத்து கடைக்கு போய் வெறும் சிக்கன் பிரியாணி தான் இருக்கிறது என்றாலே நம்ம ஊர் ஆட்கள் அப்செட் ஆகிவிடுவார்கள். அதிலும், சில பல குறைகள் இருந்தால், சண்டைக்கே போய் விடுவார்கள் அப்படியொரு நிலைமை தான் வலிமை படத்துக்கு நேர்ந்துள்ளது.

2 வருட காத்திருப்பு

2 வருட காத்திருப்பு

விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என கடந்த 2019ம் ஆண்டு இரண்டு சூப்பர் ஹிட் படங்களை அஜித் கொடுத்தது தான் இப்படியொரு மன வருத்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. சில அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு வெளியே கண்ணீர் விட்டு கதற காரணம் 2 ஆண்டுகளுக்கும் மேல் வலிமை படத்திற்காக காத்திருந்து கடைசியில் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாமல் போனதே என்பதால் தான்.

ஹைலைட்

ஹைலைட்

வலிமை படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு என்றே படத்தை பார்க்கலாம் என்கிற விதத்தில் படம் பக்கவாக ஆக்‌ஷன் மற்றும் பைக் பிரியர்களுக்கு உருவாக்கப்பட்டது மட்டும் தான் ஹைலைட்டும் ஆறுதலும். அதே நேரத்தில் இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாக இருப்பது மட்டும் தான் படத்திற்கு பலவீனம் என பலரும் விமர்சித்துள்ளனர்.

அஜித் காதுக்கு

அஜித் காதுக்கு

தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் அஜித் குமார், இயக்குநர் எச் வினோத் உள்ளிட்டோரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டியுள்ள நிலையில், அவர்களும் ஆக்கமான இந்த விமர்சனத்தை எடுத்துக் கொண்டு படத்தின் நீளத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

15 நிமிடம் கட்

15 நிமிடம் கட்

2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக் கூடிய அஜித்தின் வலிமை திரைப்படத்தை தமிழில் இரண்டாம் பாதியில் வரும் 12 நிமிட காட்சிகளை ட்ரிம் செய்ய வலிமை படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்தியில் 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட உள்ளனவாம். இந்தியில், வேறமாறி பாடலையும் நீக்க பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை மாலை காட்சி முதல் இந்த மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக வெளியான புஷ்பா படத்திலும் ஒரு சில காட்சிகள் நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Valimai FDFS Review | Ajith | Huma Qureshi | H Vinod | Yessa Bussa | Filmibeat Tamil
குறைந்த டிக்கெட் புக்கிங்

குறைந்த டிக்கெட் புக்கிங்

வலிமை படத்தின் டிக்கெட் புக்கிங் முதல் நாளில் அனல் பறந்த நிலையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான டிக்கெட் புக்கிங் சுமாராக செல்வதாகவே தகவல்கள் வெளியானது தான் வலிமை படக்குழுவின் இந்த முடிவுக்கே காரணம் என்றும் கூறுகின்றனர். விரைவில் எந்த எந்த காட்சிகள் நீக்கப்பட்டன என்கிற தகவல்களும் கிடைத்து விடும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X