வலிமை ஷூட்டிங்கில் செல்போனுக்கு தடை... ஸ்டில்ஸ் லீக் ஆவதைத் தடுக்க உஷார்

By

சென்னை: அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங்கில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம், நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது.

இதைத் தொடர்ந்து வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித். நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத், இதையும் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

 காவல் துறை அதிகாரி

காவல் துறை அதிகாரி

இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதை போனிகபூர் உறுதி செய்தார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், நடந்து வருகிறது.

 2 ஹீரோயின்கள்

2 ஹீரோயின்கள்

அஜித் ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். இறுதியில் யாமி கவுதமும் இலியானாவும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதைப் படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

 ஆக்‌ஷன் காட்சிகள்

ஆக்‌ஷன் காட்சிகள்

இதற்கிடையே ஐதராபாத்தில் இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு ஸ்டன்ட் இயக்குனர் சண்டைப் பயிற்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது.

 செல்போனுக்குத் தடை

செல்போனுக்குத் தடை

அஜித் புதிய தோற்றத்தில் நடிக்கிறார். காட்சிகள் மற்றும் அஜித்தின் கெட்டப், லீக் ஆவதைத் தடுக்க, படப்பிடிப்புத் தளத்துக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X