ஏகே 61ல் மீண்டும் இணையும் வலிமை கூட்டணி... இந்த முறை ஆக்ஷன் கம்மிதானாம்!

சென்னை : நடிகர் அஜித், எச் வினோத், போனிகபூர் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் வலிமை.

இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில் வலிமை கூட்டணி மீண்டும் ஏகே61 படத்திற்காக இணையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை படம்

நேர்கொண்ட பார்வை படம்

நடிகர் அஜித்குமார் சமூக அக்கறையுள்ள படங்களில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில் அவரது நேர் கொண்ட பார்வை படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் சிறப்பானவகையில் வழக்கறிஞர் வேடத்தை ஏற்று நடித்திருந்தார் அஜித்.

போனி கபூர் தயாரிப்பு

போனி கபூர் தயாரிப்பு

இந்த கேரக்டர் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. மேலும் சமூக அக்கறையுள்ள படமாக வெளிவந்த அந்தப் படம் பெண்களின் விருப்பம், உரிமை உள்ளிட்டவை குறித்து பேசியது. தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி அஜித் இந்தப் படத்தில் நடித்திருந்தார். போனி கபூர் படத்தை தயாரித்திருந்தார்.

மீண்டும் இணைந்த கூட்டணி

மீண்டும் இணைந்த கூட்டணி

இதையடுத்து இந்தக் கூட்டணி தற்போது இணைந்து வலிமை படத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தில் அஜித் இளமையாக மிகவும் அழகாக காணப்படுகிறார். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டீசரும் சிறப்பாக அமைந்திருந்தது.

உற்சாகத்தில் ரசிகர்கள்

உற்சாகத்தில் ரசிகர்கள்

படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டண்ட் காட்சிகளுக்கு இந்தப் படத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளது இந்த போஸ்டர்களின் மூலம் தெரியவருகிறது. இந்நிலையில் வலிமை படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்து அஜித்தின் 61வது படத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே 61 படம்

ஏகே 61 படம்

இந்தப் படத்தில் வலிமை படம் போல இல்லாமல் குறைவான ஆக்ஷன் காட்சிகளும் சிறப்பான மற்றும் அதிகமான டயலாக்குகளை கொண்ட காட்சிகளும் இடம்பெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூகத்தின் முக்கியமான பிரச்சினை குறித்து இந்தப் படம் பேசவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை உலக அளவிலானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமூக அக்கறைக்கு முக்கியத்துவம்

சமூக அக்கறைக்கு முக்கியத்துவம்

நேர்கொண்ட பார்வை படத்தில் ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டரில் நடித்திருந்தார் அஜித். அதையடுத்து தற்போது ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ள வலிமை படம் வெளியாக உள்ளது. அடுத்ததாக மீண்டும் சமூக அக்கறையுள்ள படத்தில் அஜித் நடிக்கவுள்ளது அவரது ரசிகர்களிடையே சிறப்பாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X