வேற லெவல் அட்டகாசம்...அஜித்தின் நியூக் லுக்...வலிமை மோஷன் போஸ்டர் படைத்த நம்பர் ஒன் சாதனை

சென்னை : ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் 2 ஆண்டுகளாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், ஸ்பெயினில் எடுக்கப்பட வேண்டிய க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மட்டும் மீதமுள்ளது.

Recommended Video

Valimai ONE LINE இதுதான் | செம்ம Sentiment, Action இருக்கு | Thala Ajith, H.Vinoth

படத்திற்கு பூஜை போட்டது முதல் 2 ஆண்டுகளாக எந்த அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்தனர் படக்குழுவினர். இதனால் அஜித் ரசிகர்கள் போற இடமெல்லாம் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர். ட்விட்டரிலும் அவ்வப்போது ஹேஷ்டாக் உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வந்தனர்.

Valimai team revealed Ajiths look and motion poster creates new record

வலிமை என்ற ஒற்றை வார்த்தை உலக ஃபேமஸ் ஆன பிறகும் ஃபஸ்ட்லுக் இப்போ வருது, அப்போ வருது என கூறி வந்தனர். அஜித் பிறந்தநாளுக்கே வெளியிடப்படும் என கூறப்பட்ட ஃபஸ்ட்லுக் போஸ்டர், கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு வழியாக ஜுலை 11 அன்று காலையில் அறிவிப்பு வெளியிட்டு, மாலையில் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள், மாஸான பைக் ரேஸ் காட்சிகள் என மிரட்டலாக வெளியிடப்பட்டது வலிமை மோஷன் போஸ்டர். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை இந்த மோஷன் போஸ்டரை வேற லெவலுக்கு கொண்டு போனது.

இந்த மோஷன் போஸ்டர் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர்களை அஜித் ரசிகர்கள் முதல், பிரபலங்கள் வரை புகழ்ந்து தள்ளினர். அஜித் ரசிகர்களோ வலிமை மட்டுமில்லாமல் போனி கபூர், ஹச்.வினோத் என அனைவரின் பெயரிலும் ஹேஷ்டாக் உருவாக்கி, அவற்றை டிரெண்டிங் ஆக்கி அசத்தினர்.

இந்த மோஷன் போஸ்டரை வைத்து விஜய் - அஜித் ரசிகர்கள் இடையே ஹேஷ்டாக்கில் மோதலே நடந்தது. வலிமை மோஷன் போஸ்டரை சிலர் கலாய்த்தும் வந்தனர். ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் வலிமை படக்குழு விரைவில் ஸ்பெயின் செல்ல தயாராகி வருகிறது.

இந்நிலையில் அஜித் பைக்கில் அமர்ந்தபடி இருக்கும் புதிய ஸ்டில்லை நேற்று வெளியிட்டுள்ளனர். அத்துடன் வலிமை மோஷன் போஸ்டர் யூட்யூப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள சாதனை தகவலையும் வெளியிட்டுள்ளனர். இந்த 10 மில்லியன் என்பது ஜுலை 13 மாலை 6 மணி நிலவரம் தானாம். அதாவது மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு சரியாக 48 மணி நேரத்தில் எட்டிய சாதனை.

தற்போது இந்த மோஷன் போஸ்டர் கிட்டதட்ட 25 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இது விஜய்யின் பீஸ்ட் பட ஃபஸ்ட்லுக்கிற்கு கிடைத்த பார்வைகளை விட அதிகம். இந்தியாவிலேயே 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்த ஃபஸ்ட்லுக் போஸ்டரில் 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று விஜய்யின் மாஸ்டர் படம் முதலிடத்தில் இருந்தது.

Valimai team revealed Ajiths look and motion poster creates new record

இதற்கு அடுத்தபடியாக 2.73 லட்சம் லைக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட்லுக் இருந்தது. ஆனால் மாஸ்டர் படத்தின் சாதனையை பின்னுக்கு தள்ளி வலிமை மோஷன் போஸ்டர், வெளியிடப்பட்ட 21 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவிலேயே அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட மோஷன் போஸ்டர், ஃபஸ்ட்லுக் என்ற பெருமையை வலிமை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X