அஜித்தின் வலிமை டீசர் ரிலீஸ் தேதி.. லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை : பல நாட்கள் காத்திருந்தவனுக்கு பிரியாணி கிடைத்தது போல அடுத்தடுத்து அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது வலிமை படக்குழு.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து வரும் இந்த படத்தில் ஹியூமா குரேசி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் வலிமை படத்தின் டீசர் ரிலீஸ் தேதி பற்றிய முக்கிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

கார்த்திகேயா வில்லனாக
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் உடன் இணைந்து அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தயாரித்து வர தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இதில் வில்லனாக நடித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை
போலீஸ் அதிகாரியாகவும், பைக் ரேஸராகவும் இப்படத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். வலிமை அப்டேட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் பல நாட்களாக தவம் கிடந்தனர். எனவே கொஞ்சம் சர்ப்ரைசாக அடுத்தடுத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியிட்டு திக்கு முக்காட வைத்தது. இதில் அஜித் இளமையுடன் செம கம்பீரமாக இருக்க ரசிகர்கள் அதை கொண்டாடினர்.
Recommended Video

ஆகஸ்ட் 15
இணையதளத்தில் எங்கு திரும்பினாலும் வலிமை பட போஸ்டர் நிரம்பிக் கிடந்த நிலையில் பாடல்கள் மற்றும் டீசர் எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வலிமை டீசர் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

மோத உள்ளதாக
டீசரைத் தொடர்ந்து பாடல்களையும் அடுத்தடுத்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது எனக் கூறப்படுகிறது . மேலும் இப்படம் பொங்கல் ரேசில் அண்ணாத்த உடன் மோத உள்ளதாக தெரிகிறது . 2019-ல் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் ரேசில் மோதியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications