முதல்ல ட்ரெயிலர் தான் ரிலீஸ்... ரிலீஸ் அன்னைக்கு பாடல்கள்... வலிமை இயக்குநர் பரபர பேட்டி

சென்னை : நடிகர் அஜித், ஹுமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வலிமை.

இந்தப் படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியானவண்ணம் உள்ளன.

படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக ட்ரெயிலர்தான் வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வலிமை படம்

வலிமை படம்

நடிகர் அஜித் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள படம் வலிமை. முன்னதாக நேர்கோண்ட பார்வை படத்திற்காக இணைந்து அஜித் -வினோத் -போனி கபூர் கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

படம் பொங்கலையொட்டி இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அஜித்தின் படத்திற்காக அவரது ரசிகர்கள் இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில் இந்தப் படம் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

வரவேற்பை பெற்ற பாடல்கள்

வரவேற்பை பெற்ற பாடல்கள்

மேலும் படத்தின் இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக அம்மா சென்டிமெண்ட்டை வைத்து வெளியான பாடலும் சிறந்த எதிர்பார்ப்பை படத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகளும் உள்ளதாக படத்தின் போஸ்டர்கள் தெரிவிக்கின்றன.

அடுத்தடுத்த அப்டேட்கள்

அடுத்தடுத்த அப்டேட்கள்

படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கேட்டு சமூக வலைதளங்களில் தினந்தோறும் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் தயாரிப்பாளர் போனி கபூரும் அடுத்தடுத்த அப்டேட்களை கொடுத்தவண்ணம் உள்ளார்.

வரவேற்பை பெற்ற போனிகபூர்

வரவேற்பை பெற்ற போனிகபூர்

இவரது இந்த நடவடிக்கைகளும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றன. அப்டேட் கிங் என்று இதன்மூலம் அவர் ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குநர் எச் வினோத் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக பாடல்கள்

அடுத்ததாக பாடல்கள்

மேலும் படத்தில் அமைந்துள்ள அடுத்த இரண்டு பாடல்கள் படத்துடன் மிகுந்த தொடர்புடன் உள்ள நிலையில், அந்த பாடல்கள் படத்தின் வெளியீட்டின்போதே வெளியாகும் என்றும் வினோத் குறிப்பிட்டுள்ளார். அஜித் படத்திற்கு எப்போதுமே ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுப்பார்கள். ஆனால் இந்தப்படம் அந்த ரெக்கார்டுகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X