வலிமை படத்தின் சூப்பர் அப்டேட்.. தல அஜித் ரோல் குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்திய நடிகை!
சென்னை: வலிமை படத்தில் தல அஜித்தின் ரோல் குறித்த சூப்பரான சுவாரஸ்யமான தகவலை அந்த படத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர் அம்பலப்படுத்தி உள்ளார்.
வலிமை பட டைட்டிலை தவிர அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அப்டேட்டையும் இதுவரை படக்குழு வெளியிடவில்லை.
ஆனால், அந்த படத்தை பற்றிய பல அப்டேட்கள் கொஞ்சம் கொஞ்சமாக சமூக வலைதளங்களில் கசிந்து தல ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன.

தீபாவளிக்காவது
தல அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர், அஜித்தின் ஆணைக்கிணங்க அந்த முடிவை படக்குழு மாற்றியது. இந்த ஆண்டுக்குள் வலிமை படம் வர வாய்ப்பில்லை என்றும் அட்லீஸ்ட் தீபாவளிக்காவது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் வெளியாகுமா என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

ஹூமா குரேஷி
வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருகிறார் என்றும், டோலிவுட் நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்து வரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் முன்னதாக கசிந்து விட்டன. இயக்குநர் எச். வினோத் மற்றும் போனி கபூர் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 வயசு குறைஞ்சு
இந்நிலையில், அடுத்ததாக வலிமை படத்தில் நடித்து வரும் நடிகை சங்கீதா தல அஜித்தின் கெட்டப் பற்றிய சூப்பரான அப்டேட்டை சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் தனது ரசிகர்களுடன் பேசும் போது ஓப்பன் செய்துள்ளார். தல அஜித் இதற்கு முன் நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் 10 முதல் 15 வயது வரை குறைந்த செம ஸ்மார்ட்டான அஜித்தை வலிமை படத்தில் காணலாம் எனக்கூறி அஜித் ரசிகர்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார்.

உடல் எடை குறைத்து
வலிமை படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை அதிகளவில் குறைத்து நடிகர் அஜித் நடித்துள்ளார் என்றும், இந்த படம் நிச்சயம் தல அஜித்தை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்றும் நடிகை சங்கீதா கூறியுள்ள அப்டேட் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.
Recommended Video

வெடிகுண்டு மிரட்டல்
சமீபத்தில் தல அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு மையத்திற்கு போன் செய்தது பரபரப்பை கிளப்பியது. மோப்ப நாய்களுடன் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் போலீசார் ஒரு மணி நேரம் மேற்கொண்ட சோதனையின் முடிவில் அது வெறும் புரளி என்பது உறுதியானது.

கொரோனா நிதி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நடிகர்கள் சூர்யா, ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்ட சில பிரபலங்கள் நிதியுதவி வழங்கினர். தல அஜித் தனது சார்பாக 25 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார். மேலும், சினிமா தொழிலாளர்கள் குடும்பங்களுக்காக ரூ. 10 லட்சமும் நடிகர் அஜித் வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications