3 நாள் ஷூட்டிங் தான் பாக்கியாம்.. அப்போ இந்த தீபாவளி தல தீபாவளி தான் போல #ValimaiUpdate

சென்னை: வலிமை படம் குறித்த சூப்பரான ஹாட் அப்டேட் டிரெண்டாகி வருகிறது.

வெளிநாட்டில் எடுக்க வேண்டிய ஒரே ஒரு ஸ்டன்ட் காட்சி மட்டுமே வலிமை படத்தில் மீதம் உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

லாக்டவுன் நேரத்தில் படத்தின் அனைத்து விதமான தயாரிப்பு பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்.

600 நாட்களுக்கு மேல்

600 நாட்களுக்கு மேல்

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்திற்கு பூஜை போட்டு 600 நாட்கள் மேல் ஆகி விட்டதாகவும், அந்த படம் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

அப்படி சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு சந்தோஷத்தை வழங்கும் விதமாக தற்போது #ValimaiUpdate ட்விட்டரில் டாப் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது. மேலும், வலிமை படம் எந்தளவுக்கு உருவாகி உள்ளது என்பது தொடர்பான சூப்பரான தகவலும் கிடைத்துள்ளது.

3 நாள் தான் பாக்கி

3 நாள் தான் பாக்கி

அது என்னவென்றால், இன்னும் வெறும் 3 நாள் மட்டுமே வலிமை படத்தின் ஷூட்டிங் பாக்கி உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன. கொரோனா லாக்டவுன் முடிந்து வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்த உடனே படக்குழு அந்த கடைசி கட்ட படப்பிடிப்பை முடிக்க காத்திருக்கிறதாம்.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

லாக்டவுன் நேரத்தையும் வீணடிக்காமல் படக்குழு படத்தின் எடிட்டிங், பாடல்கள், டப்பிங் உள்ளிட்ட அனைத்து விதமான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் தீயாக வேலை செய்து முடித்து வருகிறார்களாம். இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் அந்த காட்சிகளுக்கான போஸ்ட் புரொடக்‌ஷனையும் முடித்து முழு படமும் விரைவில் ரெடியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபி சிஐடி

சிபி சிஐடி

மங்காத்தா படத்தில் போலீசாக நடித்த அஜித் கொள்ளையிலும் ஈடுபடுவார். அதே போல வலிமை படத்திலும் சூப்பரான ராபரி காட்சி இடம்பெற்றுள்ளதாகவும், மேலும், தல அஜித் இந்த படத்தில் சிபி சிஐடி அதிகாரியாக நடித்துள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 5 சண்டை காட்சிகளும் தெறிக்கவிட காத்திருக்கின்றன.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

படிப்படியாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் கொரோனா தாக்கம் முழுவதுமாக குறைந்து விட்டால் அக்டோபர் மாதத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து விட்டு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு படம் நிச்சயம் வெளியாகும் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X