Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வலிமை படத்துக்கா? மீண்டும் இணைந்த யுவன் சங்கர் ராஜா – ஸ்ரேயா கோஷல் காம்போ.. தல ரசிகர்கள் ஆர்வம்!
சென்னை: மீண்டும் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியது மகிழ்ச்சி என அவருடன் இருக்கும் புகைப்படத்தை போட்டு வைரலாக்கி வருகிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்.
கடந்த ஆண்டு வெளியான சூர்யாவின் என்.ஜி.கே படத்தில் இடம்பெற்ற "அன்பே அன்பே பேரன்பே' பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
2018ம் ஆண்டே அந்த பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் யுவனின் இசையில் ஸ்ரேயா கோஷல் புதிய பாடலை பாடியுள்ளது தல ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
7ஜி ரெயின்போ காலனி
யுவன் சங்கர் ராஜா இசையில் ஸ்ரேயா கோஷல் 7ஜி ரெயின்போ காலனி படத்திற்காக பாடிய "நினைத்து நினைத்து பார்த்தேன்' பாடல் மெலோடி ரசிகர்கள் மத்தியில் என்றுமே நீங்காமல் நெஞ்சில் இருக்கும்.
இரண்டு வருஷம் ஆகிடுச்சு
என்.ஜி.கே படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவும், ஸ்ரேயா கோஷலும் பணிபுரிந்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்கள் ஆகிடுச்சு. அந்த படத்தில் இடம்பெற்ற அன்பே அன்பே பேரன்பே பாடல் 50 மில்லியன்களை கடந்து யூடியூபில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
|
மீண்டும் கூட்டணி
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிஸியாக சுற்றித்திரியும் ஸ்ரேயா கோஷல் மீண்டும் யுவன் கூட்டணியில் புதிய பாடல் ஒன்றை பாடியுள்ளாராம். யுவனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
|
தல அஜித்தின் வலிமையா?
ஸ்ரேயா கோஷல் பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை பார்த்தவுடன் அஜித் ரசிகர்களுக்கு அப்பாடா கடைசியா ஒரு அப்டேட் கிடைச்சுடுச்சுன்னு ரொம்ப ஆர்வத்துடன் வலிமை? படத்திற்கான பாடலா என கேட்டு வருகின்றனர். ஆனால், எந்த படத்திற்கு என்ற பதிலை இருவரும் கூறவில்லை.
|
வலிமை அப்டேட் ப்ளீஸ்
தல அஜித்தின் வலிமை படத்திற்கான அப்டேட் ஏதாவது கிடைக்குமா? ஃபர்ஸ்ட் லுக்காவது விடுவார்களா என தல ரசிகர்கள் தினமும் தயாரிப்பாளர் போனி கபூரின் ட்விட்டர் பக்கம் வட்டமிட்டு வருகின்றனர். இந்த ரசிகர் வலிமை அப்டேட் ப்ளீஸ் என போட்டோ கமெண்ட் போட்டுள்ளார்.
|
வேற லெவல் வெயிட்டிங்
யுவன் சங்கர் ராஜா - ஸ்ரேயா கோஷல் கூட்டணி என்றாலே அழகான மெலோடி கிடைப்பது கன்ஃபார்ம். அவர்கள் காம்போவில் ஏற்கனவே வந்து ஹிட்டான பாடல்களின் தொகுப்பை போட்டு அடுத்த பாடலுக்காக வேற லெவல் வெயிட்டிங்கில் இருக்கிறார் இந்த ரசிகை.
|
அஜித் ரசிகர்கள் ஆர்வம்
யுவன் சங்கர் ராஜா இசையில் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள புதிய பாடல் நிச்சயம் வலிமை படத்திற்காகத் தான் இருக்கும் என அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் வலிமை குறித்த கருத்துக்களையும் எதிர்பார்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
— STR Kavin Army ᵐᵃᵃⁿᵃᵃᵈᵘ ˢᵗʳ (@iamstrbhuvi) January 10, 2020 |
சிம்புவின் மாநாடு?
சிம்புவின் மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார் என்பதால், இந்த காம்போ நிச்சயம் சிம்புவின் மாநாடு படத்திற்குத் தான் என சிம்பு ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
நீங்களாவது அப்டேட் கொடுங்க
ஸ்ரேயா கோஷல் ட்வீட்டுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்ட யுவன் சங்கர் ராஜாவிடமும், அஜித் ரசிகர்கள் தலைவா நீங்களாவது அப்டேட் கொடுங்க என கதறி வருகின்றனர்.