ஆறு மணிக்கு சர்ப்ரைஸ் இருக்கு.. வலிமை பட வில்லனே அதிகாரப்பூர்வமா அறிவிச்சுட்டாரே.. கொல மாஸ் தான்!

சென்னை: தல அஜித்தின் வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல டோலிவுட் ஹீரோ கார்த்திகேயா போட்டுள்ள அப்டேட் ட்வீட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

Valimai ONE LINE இதுதான் | செம்ம Sentiment, Action இருக்கு | Thala Ajith, H.Vinoth

700 நாட்களாக வலிமை படத்தின் அப்டேட்டுக்காக பிரதமர் மோடி முதல் ஐரோப்பா கால்பந்தாட்ட மைதானம் வரை ஏகப்பட்ட இடங்களில் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு ஓய்ந்து விட்டனர்.

அவர்களே எதிர்பார்க்காத அளவுக்கு அதிரடியாக இன்று மாலை 6 மணிக்கு சர்ப்ரைஸாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாக உள்ளது.

நேர்கொண்ட பார்வைக்கு பிறகு

நேர்கொண்ட பார்வைக்கு பிறகு

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் எச். வினோத் தல அஜித்தை வைத்து பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு முறை வினோத் உடன் வலிமை படத்தில் இணைந்துள்ளார் தல அஜித்.

நான் தான் வில்லன்

நான் தான் வில்லன்

அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அப்டேட்டையும் இதுவரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை. அதன் காரணமாகவே ஏகப்பட்ட அஜித் ரசிகர்களை அவரை கண்ட மேனிக்கு திட்டித் தீர்த்தனர். ஆனால், வலிமை படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா கும்மகொண்டா நடிப்பது கசிந்தது. பின்னர் அவரே அதனை ஒப்புக் கொண்டார்.

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகைகள்

அதே போல வலிமை படத்தில் ஹீரோயினாக காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வரும் தகவலும் கசிந்தன. முன்னதாக நேர்கொண்ட பார்வை படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார்.

6 மணிக்கு சர்ப்ரைஸ்

6 மணிக்கு சர்ப்ரைஸ்

சினிமா டிராக்கர்கள் தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது என அறிவித்த நிலையில், ரசிகர்கள் நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் தல தரிசனத்தை காணப் போகும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வந்த நிலையில், Surprise at six என கார்த்திகேயா ட்வீட் போட்டு சாயங்கால சம்பவத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.

வெயிட்டிங்கிலேயே வெறியாகுதே

வெயிட்டிங்கிலேயே வெறியாகுதே

இன்று காலையிலேயே தல அஜித்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியாகும் போதே இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படியொரு எதிர்பாரா இன்ப அதிர்ச்சி அனைவரையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தி வருகிறது. எப்படா 6 மணி ஆகும் என ரசிகர்கள் வெயிட்டிங்கிலே வெறியாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X