ஷர்ட் இல்லாமல்.. எவ்ளோ ஹாட்டா இருக்காரே.. ராம் கோபால் வர்மா பார்த்தாருன்னா என்ன ஆகுமோ?

சென்னை: ஆர்.எக்ஸ் 100 படத்தின் மூலம் ஹீரோவாக பிரபலமான கார்த்திகேய கும்மகொண்டாவின் சிக்ஸ்பேக் லுக் வைரலாகி வருகிறது.

தல அஜித்தின் வலிமை படத்தில் கார்த்திகேய கும்மகொண்டா தான் வில்லனாக நடித்து வருகிறார் என்ற தகவல்கள் பரவியது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் நேரத்தில் தனது உடலை வேற லெவலுக்கு வொர்க்கவுட் செய்து மாற்றியுள்ளார் கார்த்திகேய கும்மகொண்டா.

ஆர்.எக்ஸ் 100 ஹீரோ

ஆர்.எக்ஸ் 100 ஹீரோ

பல்சர் பைக்கை வைத்து தமிழில் தனுஷின் பொல்லாதவன் படம் வெளியானது போல, தெலுங்கில் யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கை வைத்து இயக்குநர் அஜய் பூபதி எடுத்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. சமீபத்தில் பில்லோ சேலஞ்ச் செய்து ரசிகர்களை கவர்ந்த பயல் ராஜ்புத் நாயகியாக நடித்திருப்பார்.

செம சிக்ஸ்பேக்

செம சிக்ஸ்பேக்

கடந்த இரண்டு மாதங்களாக லாக்டவுன் காரணத்தால் வீட்டிலேயே இருந்த நடிகர் கார்த்திகேய கும்மகொண்டா தினமும் கடினமான வொர்க்கவுட் செய்து தனது உடம்பை செம கட்டுமஸ்த்தாக மாற்றியுள்ளார். தற்போது, சிக்ஸ்பேக் வைத்திருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்கள் மற்றும் ரசிகைகளை வாய் பிளக்க வைத்துள்ளார்.

வலிமை வில்லன்

வலிமை வில்லன்

வலிமை படத்தில் சர்வதேச போலீஸ் அதிகாரியாக தல அஜித் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றாலும், ஹீரோயினாக ஹூமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேய கும்மகொண்டாவும் நடிக்கும் தகவல் கசிந்துள்ளன.

அஜித்துடன் மோதல்

அஜித்துடன் மோதல்

டோலிவுட் ஹீரோவான கார்த்திகேய கும்மகொண்டா தமிழில் அஜித்துக்கு வில்லனாக வலிமை படத்தில் அறிமுகமாகவுள்ளார். பைக் ரேஸராகவும், மாஸ் வில்லனாகவும் இந்த படத்தில் கார்த்திகேய கும்மகொண்டா நடித்திருப்பதாகவும், தல அஜித்துடன் செம மாஸான சண்டைக்காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

வலிமை படத்தில் கார்த்திகேய கும்மகொண்டா நடித்து வரும் தகவல் அறிந்த தல ரசிகர்கள், அவர் தற்போது ஷர்ட் இல்லாமல் செம ஹாட்டாக சிக்ஸ்பேக் வைத்தபடி வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து, வலிமை படத்திற்கு வேற லெவலில் ரெடி ஆகுறீங்க போல, உங்களை தல அஜித்துடன் திரையில் காண காத்திருக்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

Climax Trailer | Mia Malkova | Ram Gopal Varma | #Climax | RGV's Movie
ராம் கோபால் வர்மா பார்த்தாருன்னா

ராம் கோபால் வர்மா பார்த்தாருன்னா

ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான அவரது சிக்ஸ்பேக் புகைப்படத்தை பார்த்த சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, தான் 'கே' ஆக மாற விரும்புவதாக கூறி இருந்தார். இந்நிலையில், கார்த்திகேய கும்மகொண்டாவின் இந்த புகைப்படத்தை பார்த்தால் என்ன ஆவார் என ரசிகர்கள் அவரது டிவீட்டை எடிட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X