அரபி குத்து பாடலில் விஜய்யின் நடனம் குறித்து வலிமை வில்லன் என்ன சொன்னார் தெரியுமா !

சென்னை: தமிழ் சினிமாவிற்கு புதிய வரவாக பிரபல தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா வலிமை படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார்

Recommended Video

S. A. Chandrasekhar | 9 வருஷத்துல 55 படம் பண்ணிட்டேன் | Filmibeat Tamil

தெலுங்கில் ஆர்எக்ஸ்100, ஹிப்பி, குணா 369, கேங் லீடர்,90ml,சாவு கப்புர செல்லகா, ராஜ விக்ரமர்கா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மிரட்டலான வில்லனாக நடித்த கார்த்திகேயா இப்பொழுது அரபி குத்துப் பாடலில் விஜய்யின் நடனத்தை பற்றி பேசியுள்ளார்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் ரசிகர்கள் மத்தியில் ஆவலை உண்டாக்குகின்றன. அந்த வகையில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வலிமை திரைப்படம் முதலில் பொங்கலுக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே திறக்கப்படும் என அரசு கூறியதால் படக்குழு வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தது

விறுவிறுப்பான ஆக்ஷன் கதை

விறுவிறுப்பான ஆக்ஷன் கதை

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் போனி கபூரின் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜிப்ரான் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. விறுவிறுப்பான ஆக்ஷன் கதை களத்தில் வெளியான இந்தப் படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் பைக் ரேஸிங் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து பட்டையைக் கிளப்பி இருப்பார்

தமிழில் வில்லனாக அறிமுகம்

தமிழில் வில்லனாக அறிமுகம்

தெலுங்கில் ஆர்எக்ஸ்100, ஹிப்பி, குணா 369, கேங் லீடர்,90ml,சாவு கப்புர செல்லகா, ராஜ விக்ரமர்கா உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கும் கார்த்திகேயா தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே வில்லனாக நடித்து அசத்தி உள்ளார். வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திகேயா தொடர்ந்து தமிழில் நடிப்பார் என தெரிகிறது.

விஜய்யின் நடனத்திற்கு நான் அடிமை

விஜய்யின் நடனத்திற்கு நான் அடிமை

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கார்த்திகேயா அரபி குத்து பாடல் குறித்து பேசியுள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெறும் அரபி குத்து பாடல் அனிருத் இசையில் சிவகார்த்திகேயனின் வரிகளில் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அனைவரையும் ஆட்டம் போட வைத்து வரும் இந்த பாடலில் விஜய்யின் நடனம் செம ஸ்டைலாக செம அட்டகாசமாக இருக்கும். அரபி குத்துப் பாடலில் விஜய்யின் நடனத்திற்கு நான் அடிமை என வலிமை பட வில்லன் கார்த்திகேயா கூறியுள்ளார். அஜித்துடன் இணைந்து நடித்திருந்தாலும் விஜய் நடனத்தை பற்றி பாராட்டி கூறியிருந்த கார்த்திகேயாவின் அந்த பேட்டி இப்பொழுது இணையதளத்தில் ரசிகர்களால் பாராட்டுகளை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X