Don't Miss!
- News
"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர்
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Lifestyle
குளிர்காலத்துல இந்த ஆரோக்கியமான பானங்களை குடிப்பது... உங்க உடலுக்கு பல அதிசயங்கள செய்யுமாம்!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
நரம்பு புடைக்க சிக்ஸ் பேக்குடன் மிரட்டும்.. வலிமை வில்லன் கார்த்திகேயன்.. உச்சு கொட்டும் ரசிகர்கள் !
சென்னை : வலிமை படத்தில் வில்லனாக நடித்துள்ள கார்த்திகேயா சிக்ஸ் பேக் உடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகரான கார்த்திகேயா, பிரேமதோ மீ கார்த்தி, ஆர்.எக்ஸ் 100 போன்ற திரைப்படங்கள் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த
வாரமும்
டபுள்
எவிக்ஷனா...
வெளியேறுவதிலும்
கடுமையாக
போட்டி
போடும்
அந்த
3
பேர்
வலிமை திரைப்படத்தின் மூலம் மிரட்டும் வில்லனாக தமிழில்அறிமுகமாக இருக்கிறார்.

வலிமை
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

பொங்கலுக்கு ரிலீஸ்
வலிமை திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ந்தேதி வியாழக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு/ஏ சான்றிதழ்
மேலும் வலிமை படத்திற்கு, தணிக்கைத்துறை யு/ஏ சான்று வழங்கியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் 178 நிமிடங்கள் நீளம் கொண்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

மாஸ்காட்டும் வில்லன்
இந்த நிலையில், வலிமை திரைப்படத்தில், அஜித்துக்கு வில்லனாக நடித்துள்ள தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, தனது ட்விட்டர் பக்கத்தில் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்துவரும் நேரத்தில் வில்லனுக்கே ரசிகர்கள் மன்றம் திறந்துவிடுவார்கள் என்றும் அஜித்துக்கு வில்லன்னா சும்மா என்றும் கமெண்டுகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.