பிப்ரவரியில் பெரிய கிளாஷ் இருக்கு.. வலிமை vs எதற்கும் துணிந்தவன் மோதல் கன்ஃபார்ம்!

சென்னை: மீண்டும் பள்ளிகள் பிப்ரவரியில் திறக்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர்களும் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிதும் பயந்த அளவுக்கு இந்த முறை கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அதற்கு அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்தியதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிப்ரவரி மாதமே அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்கள் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் இயல்பு நிலை

மீண்டும் இயல்பு நிலை

கொரோனா மற்றும் அதன் அப்கிரேட் வெர்ஷன் ஓமிக்ரான் பாதிப்பு உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருவதாக அச்சுறுத்தப்பட்ட நிலையில், பொங்கல் பண்டிகையே பெரிய படங்கள் எல்லாம் வெளியாகாமல் களையிழந்தன. ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் அஜித் குமாரின் வலிமை படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டன இந்நிலையில், வரும் பிப்ரவரி முதல் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100 சதவீத இருக்கைகளுடன்

100 சதவீத இருக்கைகளுடன்

பள்ளிகள் மீண்டும் திறக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கி வரும் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைக்கும் என தியேட்டர் ஓனர்கள் மற்றும் சினிமா துறையினர் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை லாக்டவுனும் நீக்கப்படும் என தெரிகிறது.

உடனடியாக வலிமை

உடனடியாக வலிமை

தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்பட்டால் முதல் படமாக அஜித் குமாரின் வலிமை படத்தை வெளியிட போனி கபூர் முழு மூச்சாக உள்ளார். இந்த முறை மிஸ் பண்ணினால் வேறு ஏதாவது சிக்கல்கள் உருவாகும் என்றும் ஏப்ரல் மாதம் பெரிய படங்கள் பல ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், பிப்ரவரியிலேயே படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

எதற்கும் துணிந்தவன் ரெடி

எதற்கும் துணிந்தவன் ரெடி

அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திட்டமிட்டபடியே பிப்ரவரி முதல் வாரத்திலேயே வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் இரு பெரிய படங்கள் பிப்ரவரியில் வெளியாகப் போவது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X