பீஸ்ட், கேஜிஎஃப் ரிலீசுக்கு மத்தியில் வலிமை செய்யப் போகும் சூப்பர் சாதனை.. என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கேஜிஎஃப் திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில், வலிமை திரைப்படம் தொடர்ந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி திரைக்கு வந்தது.

ஏப்ரல் 14ம் தேதியுடன் 50வது நாள் கொண்டாட்டத்தை காண காத்திருக்கிறது.

100 நாள் ஓடிய மாநாடு

100 நாள் ஓடிய மாநாடு

புதிய படங்கள் இப்போதெல்லாம் 4 வாரங்கள் ஓடிய நிலையிலேயே ஓடிடியில் வந்து விடுகின்றன. தியேட்டரில் பல படங்கள் முழுசா 2 வாரம் கூட தாண்டுவதில்லை. இந்நிலையில், ஒரு சில படங்களே 25வது நாள், 50வது நாள் மற்றும் அரிதாக 100 நாட்களை தியேட்டரில் கடக்கின்றன. கடந்த ஆண்டு வெளியான மாநாடு திரைப்படம் சமீபத்தில் 100வது நாள் தியேட்டர் கொண்டாட்டத்தை கண்டது.

பீஸ்ட் ரிலீஸ்

பீஸ்ட் ரிலீஸ்

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய அளவுக்கு விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு வரவேற்பு கொடுத்துள்ளனர். அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் ரிலீஸ் சமயத்தில் நடந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கேஜிஎஃப் 2

கேஜிஎஃப் 2

கன்னட திரைப்படமான கேஜிஎஃப் 2 நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. பான் இந்திய திரைப்படமாக பல மொழிகளில் உருவாகி உள்ள கேஜிஎஃப் 2 படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். RRR படத்தைத் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனையை இந்த படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை 50வது நாள்

வலிமை 50வது நாள்

பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 என இரு பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், அஜித்தின் வலிமை திரைப்படம் மதுரையில் உள்ள பல திரையரங்குகளில் 50வது நாள் கொண்டாட்டத்தை கொண்டாட போகும் போஸ்டர்கள் டிரெண்டாகி வருகின்றன. எதற்கும் துணிந்தவன், RRR, பீஸ்ட், கேஜிஎஃப் 2 உள்ளிட்ட படங்கள் வெளியான நிலையிலும், நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் தடையில்லாமல் ஓடி வருகிறது.

100 நாள் ஓடுமா

100 நாள் ஓடுமா

மதுரை மாவட்டம் செல்லூரில் உள்ள கோபுரம் சினிமாஸில் அஜித்தின் வலிமை திரைப்படம் 50வது நாள் கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகிறது. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ள வலிமை திரைப்படம் இந்த திரையரங்கில் 100வது நாள் கொண்டாட்டத்தையும் காண வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X