பர்ஸ்ட் லுக்கூட வெளியாகாத வலிமை படம்.... உலக அளவில் அனைத்து உரிமைகளும் ரூ.215 கோடிக்கு வியாபாரம்?
சென்னை : தல அஜித், ஹுமா குரோஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வலிமை.
இந்த படத்தின் சூட்டிங் நிறைவுற்றுள்ளதாக படத்தின் இயக்குநர் எச் வினோத் அறிவித்துள்ளார். விரைவில் படத்தில் பர்ஸ்ட் லுக்,மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாக உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் உலக அளவில் படத்தின் தியேட்டர், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உள்ளிட்டவை 210 முதல் 215 கோடி ரூபாய் வரையில் வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

போனி கபூர் தயாரிப்பு
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குநர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியுடன் இணைந்து வலிமை படத்தை நடித்துக் கொடுத்துள்ளார் தல அஜித், ஸ்ரீதேவி இறந்தபோது போனிகபூருக்கு கொடுத்த வாக்குறுதியை அடுத்து இந்த படங்களில் அஜித் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சூட்டிங் நிறைவு
நேர் கொண்ட பார்வை படம் வர்த்தகரீதியாக சரியாக போகாத நிலையில் தற்போது வலிமை படம் சிறப்பான விலைக்கு வியாபாரத்தை ஈட்டியுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக டைரக்டர் எச் வினோத் அறிவித்துள்ளார். விரைவில் பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

ரூ.215க்கு வியாபாரம்
இந்நிலையில் உலக அளவில் வலிமை படத்தின் தியேட்டர், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் 210 முதல் 215 கோடி ரூபாய் வரை வியாபாரம் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Zee மற்றும் அமேசான் நிறுவனங்கள் இந்த படத்தின் ஓடிடி உரிமைக்காக முன்னதாக போட்டி போட்டன.

அதிக தொகைக்கு விற்பனை
தற்போது எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு தொகைக்கு படத்தின் உரிமையை வாங்கியுள்ளன என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகாத ஒரு படத்தின் உரிமை இத்தகைய தொகைக்கு விலை போயுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











