சும்மா வெறுப்பேத்தாதீங்க.. எப்போதான் ரியல் வலிமை அப்டேட் வரும்.. கடுப்பான அஜித் ரசிகர்கள்!
சென்னை: தல அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கி 700 நாட்களை நெருங்கி வரும் நிலையில் இன்னமும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகாதது அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், இந்தா வருது, அந்தா வருது, மோஷன் போஸ்டருடன் சேர்ந்து வருது என வெறும் அப்டேட் குறித்த அப்டேட்கள் மட்டுமே வருகிறதே தவிர வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் இந்த தேதியில் தான் என அதிகாரப்பூர்வமாக படக்குழு ஒரு அப்டேட்டும் இன்னமும் வெளியிடவில்லை.
தற்போது டிரெண்டாகி வரும் #ValimaiMotionPoster ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வலிமை மோஷன் போஸ்டர்
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உடன் வலிமை படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என ரசிகர்களுக்கு படக்குழு சார்பில் வெளியான தகவல் காரணமாக #ValimaiMotionPoster ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இரண்டு லட்டு என ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ரொம்ப சோதிக்கிறாங்க
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. படத்திற்கு பூஜைப் போட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், இன்னமும் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் ரொம்பவே அதிருப்தி அடைந்துள்ளனர்.

இன்னைக்கே வேணும்
மீண்டும் மீண்டும் வலிமை ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வருகிறது. மோஷன் போஸ்டருடன் கூட வருகிறது என வெறும் பில்டப் செய்திகள் மட்டுமே வெளியாகி வரும் நிலையில், இன்னைக்கே எங்களுக்கு வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக வேண்டும். மாலை 6 மணிக்கு வெளியிடலைன்னா அவ்ளோதான் என தல ரசிகர்கள் டென்ஷன் ஆகி விட்டனர்.

தல டக்கருடோய்
எவ்வளவு நாள் வெயிட் பண்ணாலும் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் கண்டிப்பாக பல சாதனைகளை முறியடிப்பது நிச்சயம் என்று ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர். மேலும், நடிகர் அஜித் யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்தரை போட்டோ எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சூன்னு சொல்லியே
Soonனு சொல்லியே இரண்டு வருஷம் ஆகுது.. இன்னும் எத்தனை சூன்னு தல ரசிகர்கள் கண்டபடி திட்டித் தீர்த்து ட்ரோல்களையும் தங்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டி வருகின்றனர். ஒரே ஒரு போட்டோ தானே கேட்கிறோம். அதை ரெடி பண்ணி போட ஏன் இவ்வளவு சீன் என்றும் திட்டி வருகின்றனர்.
Recommended Video

யுவன் அப்பவே சொல்லிட்டாரு
வலிமை படத்தின் மோஷன் போஸ்டருக்காக பிஜிஎம் ரெடி பண்ணிட்டேன் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த மார்ச் மாதமே சொல்லிட்டாரு, ஃபர்ஸ்ட் லுக் உடன் மோஷன் போஸ்டர் வெளியாகும் என்பது அஜித் ரசிகர்களுக்கே தெரியும், எப்போ விடப் போறீங்க என்பதை மட்டும் சொல்லுங்க என கொதித்து வருகின்றனர்.

வேற மாறி வச்சு செய்யறோம்
அந்த சீக்கிரம் எப்போ என மட்டும் கொஞ்சம் சொல்லிவிடுங்க, ரசிகர்கள் ரொம்ப வருஷமா தல தரிசனத்தை பார்க்க வெறியோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஃபர்ஸ்ட் லுக் வெளியானால் வேற மாறி வச்சு செய்ய தல ரசிகர்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். போனி கபூர் சார் கொஞ்சம் இரக்கம் காட்டுங்க!


Click it and Unblock the Notifications











