தயாரிப்பாளர் போனி கபூர் மட்டும் தான் சொல்லல.. ட்விட்டரை தெறிக்கவிடும் #ValimaiTrailer

சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்பட டிரைலர் நாளை வெளியாகும் என்றும் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்றும் அனைத்து டிராக்கர்கள் மற்றும் ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

ஆனால், இது தொடர்பாக இதுவரை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

புஷ்பா படத்தின் டிரைலர் வெளியீட்டுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஏகப்பட்ட ஹைப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில், வலிமை படத்தின் டிரைலர் எப்போ வரும் என்றே தெரியாமல் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

நீண்ட கால வெயிட்டிங்

நீண்ட கால வெயிட்டிங்

நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்துக்காக அஜித் ரசிகர்கள் 2 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு சம்மருக்கே படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளிக்கு கூட படம் வெளியாகவில்லை. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

டிரைலர் ரிலீஸ் எப்போ

டிரைலர் ரிலீஸ் எப்போ

விஸ்வாசம் டிரைலரை போல டிசம்பர் 30ம் தேதிக்கு வலிமை படத்தின் டிரைலர் வெளியாகும் என ஏகப்பட்ட ரசிகர்களும், டிராக்கர்களும் ட்வீட்களை போட்டு #ValimaiTrailer என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நியூ இயர் ட்ரீட்

நியூ இயர் ட்ரீட்

ஆனால், சில டிராக்கர்கள் நியூ இயர் டிராக்காக டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு வலிமை டிரைலர் வெளியாகும் என ட்வீட்களை போட்டு ரசிகர்களை குழப்பி வருகின்றனர். வலிமை படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்து இதுவரை தயாரிப்பு தரப்பிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாததே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.

டிரைலர் டூரேஷன்

டிரைலர் டூரேஷன்

வலிமை படத்தின் டிரைலரை சிலர் பார்த்து விட்டதாகவும் டிரைலர் ஸ்டன்னிங்காக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொத்தமாக 3 நிமிடங்கள் பவர்ஃபுல் ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த டிரைலராக வலிமை படத்தின் டிரைலர் வெளியாக உள்ளதாகவும் கூறுகின்றனர்.

போனி கபூர் சொல்லல

போனி கபூர் சொல்லல

ஆனால், இதுவரை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரிடம் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ள கனா காணும் காலங்கள் சீரியலுக்கே அப்படி புரமோஷன் பண்றாங்க வலிமை டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏன் எந்தவொரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட மறுக்கிறார் போனி கபூர் என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

புதிய ஸ்டில்கள்

புதிய ஸ்டில்கள்

வலிமை படத்தில் ஹேண்ட்ஸம் ஹங்காக இருக்கும் நடிகர் அஜித் குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் ஹீரோயின் ஹுமா குரேஷி மற்று அஜித் இருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வரும் நிலையில், வலிமை டிரைலர் வெளியானால் மிகப்பெரிய ரெக்கார்டு பிரேக் பண்ண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X