sahana sridhar Death: வள்ளியின் வேலன் சீரியல் நடிகர் திடீர் மரணம்..சோகத்தில் மூழ்கிய பிரபலங்கள்

சென்னை: இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் ஸ்ரீதர். இவர் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சீரியல்களில் வில்லன், அப்பா, குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இந்நிலையில், இன்று மாலை நடிகர் ஸ்ரீதர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த செய்தி அறிந்த திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்தடுத்து பிரபலங்களின் மரணத்தால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

நடிகராக இவரை அறிமுகம் செய்து வைத்தது பாலச்சந்தர் என்றாலும், சீரியல்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதர். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியன் வேலன் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். சென்னை தி நகர் இல்லத்தில் இருந்த போது இன்று மாலை 5 மணிக்கு மாரடைப்பால் உயிரிழந்திருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இரங்கல் செய்தி அறிந்த சக நடிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

valliyin-velan-serial-actor-sridharan-passed-away

கம்பன் மீனா இரங்கல்: வள்ளியன் வேலன் சீரியலில் கோ ஆர்டிஸ்டாக நடித்து வரும் கம்பன் மீனா இந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இப்போதுதான் வள்ளியின் வேலன் சீரீயல் சூட்டிங் முடித்து வந்தேன். ஸ்ரீதரன் இறந்த செய்தி ரொம்பவே ஷாக்கிங்காக இருக்கிறது. என்னால் நம்பவே முடியவில்லை. இந்த சீரியலில் அவர் ஹீரோயின் அப்பாவாக நடித்து வருகிறார். நான் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கிறேன். எங்க ஃபேமிலி வேற. இப்போதான் திடீர்னு வாட்ஸ்அப் குரூப்ல அவர் இறந்து விட்டதாக போட்டாங்க. அவர் எதனால் இறந்தது என்று யாருக்கும் முழுமையாக தெரியவில்லை என கம்பன் மீனா சோகத்துடன் தெரிவித்தார்.

போலீஸாக மிரட்டியவர்: சன் டிவியில் ஒளிபரப்பான தாமரை சீரியல் 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிநடை பெற்றது. நிரோஷா, நீலிமா முக்கிய லீட் ரோல்களில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் அவர் போலீஸாக நடித்து ரசிகர்களின் பேரன்பை பெற்றார். ஆனால், இப்போது உயிருடன் இல்லை என்ற செய்தி அறிந்து ரசிகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மாரைடப்பால் உயிரிழக்கும் செய்தியை கேட்டு நடிகர்கள், நடிகைகள் என பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். நேற்று பழம்பெரும் நடிகர் ரவிக்குமார் உயிரிழந்தார். இன்று நடிகர் ஸ்ரீதர் என பிரபலங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஜீ தமிழ் சேனல் அவருக்கு இரங்கல் பதிவு போட்டிருக்கும் நிலையில், கமெண்டில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X