சத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா?
சென்னை: அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சத்தமே இல்லாமல் வலிமை பட ஷூட்டிங்கை ஆரம்பித்துள்ளார் இயக்குநர் எச். வினோத்.
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை.
இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த இந்த படம் கொரோனா லாக்டவுன் காரணமாக அடுத்த ஆண்டு சம்மர் விடுமுறைக்கு ரிலீசாக உள்ளது.

ஹிட் இயக்குநர்
ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜை ஹீரோவாக வைத்து நல்ல கதை எப்போதுமே ஜெயிக்கும் என்பதை சதுரங்க வேட்டை படத்தை இயக்கி நிரூபித்திருந்தார் ஹிட் இயக்குநர் எச். வினோத். பின்னர், நடிகர் கார்த்தியை வைத்து உண்மை சம்பவங்கள் அடிப்படையில் அவர் உருவாக்கிய தீரன் அதிகாரம் ஒன்று மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் வேட்டை ஆடியது.

தல அஜித்தை இயக்கும் வாய்ப்பு
இளம் இயக்குநர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைத்து விடாத தல அஜித்தை இயக்கும் வாய்ப்பு இயக்குநர் எச். வினோத்துக்கு கிடைத்தது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என இயக்குநர் சிவா உடன் தொடர்ந்து 4 படங்களில் நடித்து வந்த அஜித், இளம் இயக்குநரான வினோத் இயக்கத்தில் பிங்க் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அசத்தினார்.

அடுத்த பட வாய்ப்பு
ரீமேக் படத்தை இயக்குவதற்கு சம்மதித்த வினோத், தனது திரைக்கதையில் ஒரு படத்தை இயக்கவும் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அஜித் உடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தார். அதன் படி, நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அதே கூட்டணியில் வலிமை படம் மிரட்டலாக உருவாகி வருகிறது.

அஜித்துக்கு காயம்
லாக்டவுனுக்கு முன்னதாக தல அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் சென்னை அவுட்டர் ரிங் ரோட்டில் நடைபெற்றது. அப்போது பைக் ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்பட்டன. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்துக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.

ரகசியம் காக்கும் படக்குழு
வலிமை படம் குறித்து எந்தவொரு அப்டேட்டையும் இதுவரை வெளியிடாமல் தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் எச். வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் ரகசியம் காத்து வருகின்றனர். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய கார்த்திகேய கும்மகொண்டா விரைவில் சூப்பரான அப்டேட் வரப் போகிறது என்ற ட்வீட்டை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார்.

மீண்டும் ஷூட்டிங்
இந்நிலையில், அதே அவுட்டர் ரிங் ரோட்டில் மீண்டும் தல அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் தொடங்கி உள்ளதாக தகவல்களும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இயக்குநர் எச். வினோத் ஸ்பாட்டில் இருந்த நிலையில், இது வலிமை படத்தின் ஷூட்டிங் தான் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

அஜித் கலந்து கொண்டாரா?
ஆனால், தல அஜித் இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது. ஸ்டன்ட் கலைஞர்களை வைத்து, மீதமுள்ள அந்த பைக் ஸ்டன்ட் காட்சிகளை இயக்குநர் எச். வினோத் இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், அக்டோபர் மாதம் தல அஜித் வலிமை பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











