twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பக்கா ஃபேமிலி என்டெர்டெய்னர்.. கொஞ்சம் லாஜிக் மிஸ்டேக்.. வானம் கொட்டட்டும் டிவிட்டர் விமர்சனம்!

    |

    Recommended Video

    Vaanam Kottatum Public Opinions | Sarath Kumar | Rathika | Aishwarya Rajesh | Vikram Prabhu

    சென்னை: வானம் கொட்டட்டும் படம் குறித்த கருத்துக்களை நெட்டிசன்கள் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

    இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வானம் கொட்டட்டும். இதில் சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் உட்பட பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தப் படம் இன்று ரிலிஸ் ஆகியிருக்கிறது.

    ஆஸ்கர் விழாவில் கவர்ச்சியில் அசத்திய நடிகைகள்! ரெட்கார்ப்பெட் 2019 ரீவைண்ட்.. இந்த ஆண்டு எப்படியோ?ஆஸ்கர் விழாவில் கவர்ச்சியில் அசத்திய நடிகைகள்! ரெட்கார்ப்பெட் 2019 ரீவைண்ட்.. இந்த ஆண்டு எப்படியோ?

    முதல் பாதி

    முதல் பாதி

    வானம் கொட்டட்டும் படத்தின் முதல் காட்சி நிறைவடைந்த நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்த தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்வதாக தெரிவித்துள்ளனர். இன்டர்வெல்லுக்கு முன்பு வரை படம் படுசுவாரசியமாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    இரண்டாம் பாதி போர்

    இரண்டாம் பாதி போர்

    படத்தில் சரத்குமாரும், ராதிகாவும் கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கின்றனர் என்றும் பாராட்டி இருக்கின்றனர். இதேபோல் விக்ரம் பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா என அத்தனை பேரும் அவர்களின் நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
    ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் போர் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    நம்ப முடியவில்லை

    நம்ப முடியவில்லை

    அதே நேரத்தில் படத்தில் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சில காட்சிகளை நம்ப முடியவில்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சாந்தனு - ஐஸ்வர்யா ராஜேஷின் காம்பினேஷன் சூப்பர் என்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    ராதிகா அமேஸிங்

    விக்ரம் பிரபுவின் நடிப்பும் படத்தில் மிரட்டலாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ராதிகா, சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம் பிரபு ஆகியோரின் நடிப்பு அட்டகாசம். நேர்த்தியான குடும்பக் கதை. சரத்குமார் அவருடைய பார்ட்டை அழகாக செய்திருக்கிறார். இதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷும் நன்றாக நடித்திருக்கிறார். ராதிகாவின் நடிப்பு அமேஸிங் என்றும் இந்த ரசிகர் கூறியிருக்கிறார்.

    லாஜிக் மிஸ்ஸிங்

    வானம் கொட்டட்டும்.. குடும்பமும் கிராமமும் இணைந்த காதல்தான் படம் என்றும் வானம் கொட்டட்டும் படத்திற்கு என்னோட ரேட்டிங் 3.5 என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.அப்பா மாதிரியே ஹீரோ முரட்டுத்தனமான கேரக்டர்.சண்டை ,அடிதடினு இருக்கறவர்,திடீர்னு எந்த"புள்ளில திருந்துனாரு?னு சொல்லவே"இல்லை. மனசை மாத்தற மாதிரி ஒரு சம்பவம் வெச்சிருக்கனுமில்ல? திடீர்னு விக்ரமன் பட ஹீரோ மாதிரி பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்ணி பெரிய ஆள் ஆகறாரு என்று படத்தின் கதையை கூறியிருக்கிறார் இவர்.

    ஜெயிலுக்கு போவாங்க?

    லாஜிக் மிஸ்டேக் 6 - வில்லன் மனநிலை சரியில்லாதவன்கற டயலாக் படத்துல அடிக்கடி வருது. அந்த டயலாக்கை சொன்னவரே அவன் மட்டும் அந்தக்கொலையை பண்ணிட்டா போலீஸ்ல மாட்டிக்குவான், ஜெயிலுக்குப் போய்டுவான்கறாரு. மனநிலை பாதிக்கப்பட்டவங்க எப்படி ஜெயிலுக்கு போவாங்க? என்று கேட்டிருக்கிறார் இந்த ரசிகர்.

    எப்படி ஹீரோ சமாளிச்சாரு?

    ஹீரோ இப்பதான் கடனை வாங்கி தொழில் பண்ண ஆரம்பிச்சிருக்கார். அப்போ ஹீரோயின்"வந்து "அப்பா ,தொழில்ல நட்டம். 2 கோடி ரூபாய்க்கு பேங்க்ல ஜாமீன் சைன்" பண்ணுனு கூப்பிடறார். 2 கோடிக்கு அஸ்சூரன்ஸ் தரனும்னா அவர் கிட்ட சொத்து மதிப்பு 3 கோடி இருக்கனும்.ஆனா ஹீரோ எப்படி சமாளிச்சாரு? என்று கேட்கிறார் இவர்.

    English summary
    Vanam Kottatum movie twitter review. Vanam kottatum movie released today. Sarathkumar, Radhika, Vikram prabu, Aishwarya Rajesh casting in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X