நவம்பர் 26ம் தேதி ரிலீசாகும் வனம் படம்... படக்குழு சூப்பர் அப்டேட்

சென்னை : நடிகர் வெற்றி உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் வனம்.

பேன்டசி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழுவினர் அப்டேட் வெளியிட்டுள்ளனர்.

வனம் படம்

வனம் படம்

கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் வனம். இயக்குநர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்ற இயக்குநுர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். எட்டு தோட்டாக்ககள் படத்தில் நடித்துள்ள வெற்றி ஹீரோவாக நடித்துள்ளார்.

பேன்டசி த்ரில்லர் படம்

பேன்டசி த்ரில்லர் படம்

அனுசித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர். பேன்டசி த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. மாயா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரான் ஈதன் யோஹான் படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணியில் மிரட்டியுள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக்

படத்தின் பர்ஸ்ட் லுக்

தேனி மாவட்டத்தின் குரங்கணி பகுதிகளில் படத்தின் பெரும்பான்மையான சூட்டிங் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்குடி செட்டிநாடு மாளிகை, சென்னை அரசுக் கலைக்கல்லூரியிலும் படத்தின் சூட்டிங் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார்.

ரிலீஸ் குறித்து அறிவிப்பு

ரிலீஸ் குறித்து அறிவிப்பு

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு படத்தின் ட்ரெயிலரும் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டலான காட்சிகள்

மிரட்டலான காட்சிகள்

விக்ரம் மோகன் படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியுள்ளார். படத்தின் காட்சிகள் மிகவும் மிரட்டலாக படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குரங்கணி பகுதியில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. பிரகாஷ் மப்பு எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X