வனம் த்ரில்லர் படம் மட்டுமல்ல... உண்மையை உரக்கச் சொல்லும் உணர்வுபூர்வமான படம்.. ரசிகர்கள் பாராட்டு!

சென்னை: இயக்குனர் ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வனம்

Recommended Video

Vanam Tamil Movie Public Review! | Actor Vetri | Filmibeat Tamil

மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் 8 தோட்டாக்கள், ஜீவி பட புகழ் வெற்றி ஹீரோவாக நடித்துள்ளார்.

வன பாதுகாப்பை பற்றியும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பை பற்றியும் பேசியுள்ள வனம் வெறும் த்ரில்லர் திரைப்படம் மட்டுமல்ல உணர்வுபூர்வமான படம் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக

பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக களமிறங்கியுள்ள ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வனம். இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஸ்ரீகண்டன் ஆனந்த் பல குறும்படங்களை இயக்கி பல விருதுகளையும் வென்றுள்ளார். இப்பொழுது முழுநீள திரைப்படமாக இவரது இயக்கத்தில் வித்தியாசமான முயற்சியில் வனம் உருவாகி உள்ளது.சிவகார்த்திகேயன் நடித்த ஐடென்டிட்டி எனும் குறும்படம் ஸ்ரீகண்டன் தான் இயக்குனர் என்பது குறிப்பிட தக்கது.

வனம்

வனம்

8 தோட்டாக்கள் என்ற மிகச் சிறந்த படத்தில் ஹீரோவாக நடித்த வெற்றி அதன் பிறகு ஜீவி என்ற மற்றொரு சூப்பர் ஹிட் படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். நடிகர் வெற்றி நடித்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்ற சூழலில் இப்பொழுது ஸ்ரீகண்டன் இயக்கத்தில் நடித்துள்ள வனம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை பெற்று வருகிறது .ரீலீஸ் ஆன முதல் நாள் துவங்கி இன்று வரை படத்தை பல ஊடங்கங்கள் பாராட்டி வருகின்றனர் .

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு

கோல்டன் ஸ்டார் புரோடக்சன் அலெக்ஸ் முதல் தயாரிப்பில் உருவாகியுள்ள வனம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியான போதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் தடம், மூக்குத்தி அம்மன் பட புகழ் ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் அனு சித்தாரா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இயற்கை பாதுகாப்பு மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை பற்றிப் பேசும் படமாகவும் அதேசமயம் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி உள்ளது.

ரசிகர்களின் பாராட்டு

ரசிகர்களின் பாராட்டு

புதிய இயக்குனர் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாமல் இயக்குனர் ஸ்ரீகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இப்பொழுது திரையரங்கில் வெளியாகி தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. த்ரில்லர் அதே சமயம் சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்தையும் கொண்டிருப்பதால் இத்திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் அனைவரையும் இருக்கையின் நுனியில் உட்கார வைத்துள்ளது . வனம் வெறும் த்ரில்லர் படம் மட்டுமல்ல உண்மையை உரக்கச் சொல்லும் உணர்வுபூர்வமான படம் எனவும் பாராட்டி வருகின்றனர்.மாநாடு படம் ஒரு பக்கம் வசூல் ரீதியாக மிக பெரிய வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் வனம் படமும் சைலண்டாக அதன் வெற்றியை தொட்டு மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X