மறுபிறவி என்பது உண்மையில் இருக்கா?… திகிலூட்டும் வனம் படத்தின் டிரைலர் !
சென்னை : வனம் திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.
8 தோட்டாக்கள் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான வெற்றி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் அனுசித்தாரா, ஸ்மிருதி வெங்கட் மற்றும் வேலராம மூர்த்தி ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கின்றனர்.

8 தோட்டாக்கள்
2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 8 தோட்டாக்கள். இதில் கதாநாயகனாக வெற்றி நடித்திருப்பார் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருப்பார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் நாசர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருப்பார்கள்.

படத்தின் கதை
வேலைக்கு சேர்ந்த புதிதிலேயே 8 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியை தொலைக்கும் இளம் போலீஸ் எஸ்.ஐ படும் பாடும் அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் சட்டவிரோத பயன்பாடும் தான் " 8 தோட்டாக்கள் " படத்தின் கரு. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல பெயர் பெற்றது.

ஜீவி
இயக்குனர் கோபிநாத் இயக்கத்தில் நடிகர் வெற்றி நடித்து வெளிவந்த அடுத்த திரில்லர் படமான ஜீவி திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வெற்றியின் அடுத்த திரைப்படமாக திரைக்கு வருகிறது வனம்.

வனம்
கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்தன் ஆனந்த் எழுதி இயக்கியிருக்கும் வனம் திரைப்படத்தின் நடிகர் வெற்றியுடன் இணைந்து அனுசித்தாரா , ஸ்மிருதி வெங்கட் மற்றும் வேலராமமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் மோகன் ஒளிப்பதிவில், ரான் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.

திகில் டிரைலர்
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மறுபிறவி என்பது உண்மையாவே இருக்கா என்று டிரைலர் தொடங்குகிறது. இதில் த்ரில்லிங், அமானுஷியம் என டிரைலர் திகிலூட்டுகிறது. ரான் எத்தன் யோஹனின் இசை மிரட்டலாக உள்ளது. தற்போது வெளியாகி உள்ள டிரைலர் படத்தின் மீதான ஆவலை தூண்டி உள்ளது.


Click it and Unblock the Notifications