Vanangaan: “எதிரும் புதிருமாக அருண் விஜய் - பாலா..” ட்ரெண்டாகும் வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ

சென்னை: பாலாவின் வணங்கான் படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி கவனம் ஈர்த்தது.

அருண் விஜய்யின் கைகளில் பெரியார், பிள்ளையார் சிலைகள் இருப்பதாக இந்த போஸ்டர் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அருண் விஜய்யும் பாலாவும் எதிரும் புதிருமாக இருக்கும் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

 Vanangaan: Arun Vijay and Director Bala photo trending on the set of Vanangaan

எதிரும் புதிருமாக அருண் விஜய் - பாலா: சேது திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. 199ம் ஆண்டு வெளியான சேது, இயக்குநர் பாலாவுக்கு நல்ல அறிமுகம் கொடுத்ததோடு, சீயான் விக்ரமுக்கும் பெரிய கம்பேக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு ஜானரில் வெரைட்டியாக இயக்கியுள்ளார்.

இந்த வரிசையில் கடந்தாண்டு சூர்யா நடிப்பில் 'வணங்கான்' படத்தைத் தொடங்கினார் பாலா. ஆனால், பாதியிலேயே வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியதால். அவருக்குப் பதிலாக அருண் விஜய்யை ஹீரோவாக்கினார் பாலா. அதன் பின்னர் வேகமெடுத்த வணங்கான் படப்பிடிப்பு, தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து வணங்கான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் பாலா.

வித்தியாசமாக உருவாகியிருந்த வணங்கான் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது அருண் விஜய்யின் ஒரு கையில் விநாயகர் சிலையும், இன்னொரு கையில் பெரியாரின் சிலையும் இருப்பதாக வணங்கான் ஃபர்ஸ்ட் லுக் உருவாகியிருந்தது. பாலாவின் படங்களிலேயே வணங்கான் ஃபர்ஸ்ட் லுக் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதேநேரம் எப்படியும் இந்தப் படத்தை ஹிட்டாக்க வேண்டும் என்பதில் பாலா தீயாக வேலை பார்த்து வருகிறாராம்.

இந்நிலையில், வணங்கான் படப்பிடிப்பில் இருந்து அருண் விஜய் - இயக்குநர் பாலா இருவரது போட்டோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. எதிரும் புதிருமாக Face Off கொடுப்பதை போல அருண் விஜய்யும் பாலாவும் இந்த போட்டோவில் போஸ் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட இருவருமே ஒரே லுக்கில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதேநேரம் வணங்கான் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

வணங்கான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்தாண்டு இறுதிக்குள் வணங்கான் படத்தை வெளியிடவும் பாலா திட்டமிட்டுள்ளாராம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாலாவின் சிறந்த படமாக வணங்கான் உருவாகும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X