Vanangaan: ரூட்டை மாற்றிய பாலா... பாசமலர் பாணியில் வணங்கான்... சென்டிமெண்ட்டில் உருகும் அருண் விஜய்
சென்னை: விக்ரம் நடித்த சேது திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா.
கோலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அவர், தற்போது வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது,
எப்போதும் ரொம்பவே வித்தியாசமான கதைகளை இயக்கும் பாலா, வணங்கானில் தனது ரூட்டை மாற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வணங்கானில் ரூட்டை மாற்றிய பாலா: 1999ம் ஆண்டு வெளியான சேது திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பாலா. ஆக்ஷன் ப்ளஸ் காதல் தோல்வி என முதல் படத்திலேயே வித்தியாசம் காட்டி பலரது கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் என ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு கதைக் களத்தில் இயக்கியிருந்தார்.
கடந்தாண்டு சூர்யாவை ஹீரோவாக்கி 'வணங்கான்' படத்தைத் தொடங்கினார் பாலா. ஆனால், பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. தனது கேரியரில் மிகப் பெரிய பிரேக் கொடுத்த பாலாவின் படத்தில் இருந்து சூர்யா வெளியேறியது அதிர்ச்சியை கொடுத்தது. இதன்பின்னர் சூர்யாவுக்குப் பதிலாக அருண் விஜய்யை வணங்கான் படத்தில் ஹீரோவாக்கினார் பாலா.
அதன்படி மீண்டும் தொடங்கப்பட்ட வணங்கான் படத்தின் ஷூட்டிங், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திலும் இயக்குநர் பாலா வித்தியாசமான கதையோடு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும் வழக்கம் போல பாலாவின் ஆக்ஷன் ட்ரீட் இருக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால், தற்போது வணங்கான் படத்தின் கதை குறித்து வெளியான தகவல், பாலாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்துள்ளது.
அதாவது இந்த முறை ஆக்ஷன் ஜானருக்குள் செல்லாமல், முழுக்க முழுக்க சென்டிமெண்ட் படமாக வணங்கானை இயக்கி வருகிறாராம். சிவாஜியின் பாசமலர், பாரதிராஜா இயக்கிய கிழக்குச் சீமையிலே படங்கள் போல அண்ணன் - தங்கை பாசத்தை பின்னணியாக வைத்து வணங்கானை இயக்கி வருகிறாரா. அதனால் இந்தப் படம் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு ரீச் ஆகும் என சொல்லப்படுகிறது.
இன்னும் ஓரிரு மாதங்களில் வணங்கான் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தாண்டு இறுதிக்குள், படத்தை வெளியிடவும் பிளான் செய்துள்ளாராம் பாலா. காதல், நட்பு, ரவுடியிஸம் பின்னணியில் பாலவின் படங்களை பார்த்த ரசிகர்கள், வணங்கானில் பல வித்தியாசங்களைப் பார்க்கலாம் என கூறப்படுறது.


Click it and Unblock the Notifications











