Bala: விஜய் வந்தா நான் எழுந்து நிக்கனுமா? எதுக்கு விளக்கம் கொடுக்கனும்.. பாலா சொன்ன விஷயம்!
சென்னை: தமிழ் சினிமாவின் பிதாமகனாக கொண்டாடப்படுபவர் இயக்குநர் பாலா. இவரின் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படம் ஜனவரி 10ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர்,டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சூர்யா இந்த படத்தில் சூர்யா விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
வணங்கான் படத்தில் பிரச்னை ஏற்பட்டதால் சூர்யா படத்தில் இருந்து விலகி விட்டதாக சொல்லப்படுகிறது. அது உண்மை இல்லை, நானும் சூர்யா பேசினோம். பொது இடத்தில் அவரை வைத்து படம் எடுக்க முடியவில்லை கூட்டம் கூடிவிடுகிறது. இதனால், இந்த படம் வேண்டாம் அடுத்த படம் எடுப்போம் என்று இருவரும் சேர்ந்து, சுமூகமாக எடுத்த முடிவு தான் அது. எங்கள் இருவருக்கும் உறவு சுமூகமாகத்தான் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் ஏதாவது தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் உரிமை சூர்யாவிற்கு இருக்கிறது.

நான் ஏன் எழுந்து நிற்கனும்: ஒரு திரைப்பட விழாவில் விஜய் அவர்களை பார்த்து நான் எழுந்திருக்கவில்லை என்றும், விஜய்யை பாலாவிற்கு பிடிக்காது, அதனால் தான் பாலா வேண்டும் என்றே அப்படி அமர்ந்து இருந்தார் என்றும் பலவிதமான செய்திகள் பரப்பப்பட்டன. அது உண்மை இல்லை, அது செய்தியாக்கப்பட்டது, அது என்னை அறியாமல் நடந்த விஷயம். அப்படியே இருந்தாலும், நான் ஏன் அவரைப் பார்த்து எழுந்திருக்க வேண்டும், விஜய் என்னை விட எத்தனையோ வயது சிறியவர். எப்படி இருக்கும்போது நான் ஏன் எழுந்து நிற்க வேண்டும். ஒரு வேளை நான் அன்று எழுந்து நிற்காமல் இருந்தது கவனக்குறைவால் நடந்து இருக்கலாமே தவிர, அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக கால் மீது கால் போட்டு கொண்டு அமர்ந்திருக்கவில்லை.
பிடித்த நடிகர்: பிடித்தமான நடிகர்களில் விஜயும் ஒருவர், ஒருமுறை நானும் எனது குடும்பத்தினரும் ஒரு நிகழ்ச்சியில் சென்ற போது, விஜய் அங்கு இருந்தார். அப்போது என் மகள் அவருடைய மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அதை பார்த்த விஜய், என்னிடம் ஒரு செல்பி எடுத்துக் கொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டார். அப்படி ஒரு டிசிப்ளினான ஒருவரை நான் எப்படி அவமானப்படுத்துவேன். பல இடத்தில் பலவிதமான கருத்துக்கள் என்னை பற்றி வருகின்றன அவற்றுக்கெல்லாம் நான் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் யார் என்று எனக்குத் தெரியும், அப்படி இருக்கும்போது இணையத்தில் பரவும் செய்திக்காகவும், விமர்சனத்திற்காகவும் நான் பதில் கொடுத்துக் கொண்டே இருந்தால் என் வேலையை நான் சரியாக செய்ய முடியாது.


Click it and Unblock the Notifications











