Vanangaan - வணங்கான் ரிலீஸ் எப்போது?.. வெளியானது லேட்டஸ்ட் தகவல்

சென்னை: Vanangaan (வணங்கான்) நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கும் வணங்கான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் பாலா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த பிரச்னைகளை அடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். மீனவர் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அதற்கான ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்துவந்தது. ஆனால் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். அதனையடுத்து ஏற்கனவே ஹீரோயினாக கமிட்டாகியிருந்த கீர்த்தி ஷெட்டியும் விலகினார்.

Vanangaan Movie Will Release on December Month

வணங்கான் அருண் விஜய்: சூர்யா படத்திலிருந்து விலகியதை அடுத்து வணங்கான் படம் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. மேலும் பாலாவின் கேரியர் அவ்வளவுதான் எனவும் சிலர் கூறினர். ஆனால் வணங்கான் படத்தை அருண் விஜய்யை வைத்து ஆரம்பித்தார் பாலா. ஹீரோயினாக ரோஷினி பிரகாஷ் என்பவர் நடித்துவருகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். பாலாவே தயாரிக்கவும் செய்கிறார்.

Vanangaan Movie Will Release on December Month

முதல் ஷெட்யூல் ஓவர்: ஏற்கனவே விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து இயக்கிய வர்மா படம் சந்தித்த பிரச்னை மற்றும் சூர்யா விலகியது என பாலாவுக்கு அடி மேல் அடி விழுந்தாலும் மீண்டும் அவர் பழைய பாலாவாக வந்துவிட வேண்டும் என்ற கருத்தே திரை ஆர்வலர்கள் மத்தியில் இருந்தது. எந்த பிரச்னையையும் அசால்ட்டாக டீல் செய்யும் பாலா வணங்கான் படத்தின் முதல் ஷெட்யூலை அருண் விஜய்யை வைத்து சத்தமே இல்லாமல் முடித்துள்ளார்.

இரண்டாவது ஷெட்யூல்: இதனையடுத்து படத்தின் இரண்டாவது ஷெட்யூல் விரைவில் தொடங்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி வணங்கான் ஷூட்டிங் மகாபலிபுரத்தில் நடந்துவருகிறது. இந்தப் படத்தின் மூலம் பாலா தரமான கம்பேக் கொடுப்பார் எனவும் அவரது ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். மேலும் அருண் விஜய்க்கும் இந்தப் படம் மிகப்பெரிய பெயரை பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வணங்கான் படத்துக்கு மிகப்பெரிய ஆவல் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

Vanangaan Movie Will Release on December Month

எப்போது ரிலீஸ்: இந்நிலையில் வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, வணங்கான் படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக வணங்கான் படத்திலிருந்து விலகியது குறித்து பேசியிருந்த கீர்த்தி ஷெட்டி, "வணங்கான்' படத்தின் தயாரிப்புப் பணிகள் நீண்டுகொண்டே சென்றதால் படத்தில் இருந்து விலக முடிவெடுத்தேன் பாலா - சூர்யா இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்று கீர்த்தி ஷெட்டி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X