Vanangaan Negative Review: என்ன பாலா சார் இப்படி பண்ணிட்டீங்க.. உங்களை நம்பியது ஒரு குத்தமா?

சென்னை: பாலா இயக்கத்தில் இன்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் வணங்கான். அருண் விஜய், ரிதா, ரோஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முதலில் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு படப்பிடிப்பு தொடங்கி, அதன் பின்னர் சில காரணங்களால் படத்தில் இருந்து வெளியேறியவர் நடிகர் சூர்யா. தற்போது வணங்கான் படத்தில் அருண் விஜய்யின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றாலும், பாலாவின் திரைக்கதையில் சொதப்பல் இருந்ததால்தான் சூர்யா படத்தில் இருந்து விலகியுள்ளார். சூர்யா விலகியது சரிதான் போல என ரசிகர்களை யோசிக்க வைத்துவிட்டார்.

பாலா தமிழ் சினிமாவில் இயக்குநராக காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இப்படியான காலகட்டத்தில் வணங்கான் படம் ரிலீஸ் ஆனதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படம் பார்த்த ரசிகர்கள் அருண் விஜய் மற்றும் ரிதாவின் நடிப்பினைப் பாராட்டுகின்றார்கள். அதேபோல் சாம் சி.எஸ்-இன் பின்னணி இசை, ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் என அனைத்தும் பாராட்டுகளைப் பெற்றாலும் படத்தில் பாலாவின் திரைக்கதை மீது ரசிகர்களுக்கு அப்செட்தான் மிஞ்சியுள்ளது.

bala vanangaan review vanangaan arun vijay

பொதுவாகவே பாலா எளிய மனிதர்களின் குரலற்ற மனிதர்களின் வாழ்க்கையை படமாகக் காட்டுவதில் கைதேர்ந்தவர். அப்படித்தான் இவரது இதற்கு முந்தைய படங்கள் எல்லாம் இருந்தது. அந்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியும் பெற்றது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்கவைத்த படங்களாக அவரது படங்கள் அமைந்தது.

bala vanangaan review vanangaan arun vijay

திரைக்கதை: ஆனால் வணங்கானைப் பொறுத்தவரையில் கவனிக்கப்படும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ் சினிமாவையே புரட்டிப்போடும் படமாக இருக்குமா என்றால் அது கேள்விக் குறிதான். காரணம் படத்தின் திரைக்கதையில் பாலா இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்ற எண்ணம் பாலாவின் தீவிர ரசிகர்கள் மத்தியிலும் உள்ளது.

bala vanangaan review vanangaan arun vijay

சொதப்பிய பாலா: பரபரப்பே இல்லாத திரைக்கதையால் கதை மெதுவாகவே நகர்கின்றது. அருண் விஜய், ரிதா உள்ளிட்டோரிடம் நல்ல வேலை வாங்கியுள்ள பாலா, சமுத்திரக்கனியிடம் மட்டும் கோட்டைவிட்டுவிட்டார். ரசிகர்கள் மனதில் நிற்கவேண்டிய காட்சியில், சமுத்திரக்கனி நடிக்க ரொம்பவும் சிரமப்பட்டுள்ளார், ஆனால் அது பலனளிக்கவில்லை. ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் இருந்து சூர்யா, லைலா, கருணாஸ், மனோபாலா உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களை எடுத்துவிட்டால், மீதம் உள்ள விக்ரம் கதாபாத்திரத்தை பட்டி டிங்கர் பார்த்து வணங்கான் கதையை எழுதிவிட்டாரோ என ரசிகர்கள் பேசிக்கொள்ளாமல் இல்லை.

bala vanangaan review vanangaan arun vijay

கவனம்: ரசிகர்கள் இவ்வாறு பேசுவதைப் பார்க்கும்போது, சூர்யா இதெல்லாம் தெரிந்துதான் படத்தில் நடிப்பதில் இருந்தும் படத்தினை தயாரிப்பதில் இருந்தும் விலகிவிட்டார் என இணையவாசிகள் பேசி வருகின்றனர். திரைக்கதையில் கூடுதல் கவனமும், ரசிகர்களை இன்னும் கதையோடு ஒன்ற வைக்கும் காட்சிகளும் அமைத்திருந்தால் வணங்கான் தவிர்க்கமுடியாதவனாக மாறியிருப்பானோ என்னவோ

bala vanangaan review vanangaan arun vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X