Vanangaan Positive Review: காலரைத் தூக்கிவிடுங்க சுரேஷ் காமாட்சி.. பாலா, அருண் விஜய்க்கு மாஸ் கம்பேக்

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரிதா, சமுத்திரக்கனி, மிஷ்கின், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இன்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி வெளியாகியுள்ள படம் வணங்கான். 2025 தைப்பொங்கலுக்கு தமிழில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்ட படங்களில் வணங்கான் படத்திற்கும் தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் படத்தின் பிளஸ் பாய்ண்டுகள் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

வணங்கான் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தினைத் தெரிவித்து வருகின்றனர். பலரும் பாலாவைப் பாராட்டுகின்றனர். பலர் அருண் விஜய்யின் நடிப்பினைப் பாராட்டுகின்றனர். பலர் அருண் விஜய்யின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரிதாவின் நடிப்பை பாராட்டுகின்றார்கள். பலர் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து குறிப்பிட்டுப் பேசி பாராட்டுகின்றார்கள்.

vanangaan arun vijay bala

வணங்கான் படம் முதலில் நடிகர் சூர்யா நடிக்க இருந்து, அதன் பின்னர் அவர் விலகினார். மேலும் அப்போது அந்தப் படத்தை தயாரிக்க முன்வந்ததும் சூர்யாவின் 2டி நிறுவனம் தான். ஆனால் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், படத்தில் நடிப்பது மட்டும் இல்லாமல், படத்தினை தயாரிப்பதில் இருந்தும் சூர்யா பின் வாங்கினார். அதன் பின்னர்தான் இந்தப் படத்தை தயாரிக்க சுரேஷ் காமாட்சியும் நடிக்க அருண் விஜய்யும் ஒப்பந்தமானார்கள்.

சுரேஷ் கமாட்சி: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் தயாரிப்பாளர்களில் ஒருவர். இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள வணங்கான், அவரது தயாரிப்பில் அவருக்கு ஒரு மைல்கல். படத்தின் கதாநாயகன் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி. எனவே படத்தில் மாஸான வசனங்கள் என எதுவுமே இருக்க வாய்ப்பில்லை. அதேபோல், படத்தில் பரபரப்பான சண்டைக் காட்சிகள் என எதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது, இதுபோன்ற படத்தினை தயாரித்து அதனை மக்களிடத்தில் ரிலீஸ் செய்ய தனி தைரியம் தேவை. அவரது தைரியம் அவருக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

vanangaan arun vijay bala

பாலா: அதேபோல் இயக்குநர் பாலா, தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வணங்கான் படம் ரிலீஸ் ஆகியுள்ளதால், இந்தப் படத்தின் மீது தனி எதிர்பார்ப்பே உள்ளது. பாலா தனது வழக்கமான பாணியை இந்தப் படத்திலும் பின் பற்றியிருந்தாலும், நடிகர்களிடம் அருமையாக வேலை வாங்கியுள்ளார். படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் தொய்வு இருந்தாலும், காட்சிகளிலும் வசனங்களிலும், சைகை மொழியை பின் பற்றியதிலும் தன்னை மீண்டும் நீருபித்து கம்பேக் கொடுத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும்.

அருண் விஜய் - ரிதா: நடிப்பில் அருண் விஜய்க்கு இந்தப் படம் தனி அத்தியாத்தையே தொடக்கி வைத்துள்ளது. வாய் பேசுவதில் சவாலுடைய மாற்றுத் திறனாளியாக இவரது நடிப்பும், இவரது தங்கையாக வரும் ரிதாவின் நடிப்பும் ரசிகர்களை பிரமிக்க வைக்கின்றது. படத்தின் இரண்டாம் பாதியில் ரிதாவின் நடிப்பும், க்ளைமேக்ஸில் அருண் விஜய்யின் நடிப்பும் ரசிகர்களை உண்மையாகவே மெல்ட் செய்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். ஒரு சாதாரண கதையைக் கொண்டு கமர்ஷியலான விஷயங்கள் இல்லாமல், திருப்திகரமான ஒரு படத்தினை எடுக்கமுடியும் என ஒட்டுமொத்த வணங்கான் குழுவும் நிரூபித்துள்ளது.

vanangaan arun vijay bala

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X