Simbu - சிம்பு மாதிரியே பாலாவும் ஒரு குழந்தை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஷேரிங்ஸ்
சென்னை: இயக்குநர் பாலா தற்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விரைவில் படம் ரிலீஸாகவிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே பாலா ஒரு வெற்றிக்காக தவித்துக்கொண்டிருக்கிறார். எனவே இந்தப் படம் அவருக்கு தரமான கம்பேக்காக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் வணங்கான் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் பாலா பற்றி பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பாலா சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை ஆரம்பித்தார். ஆனால் சில காரணங்களால் சூர்யா படத்திலிருந்து விலகினார். இதனையடுத்து அருண் விஜய் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்து டப்பிங் பணிகளும் ஆரம்பமாகின. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமடைந்திருக்கிறது. இயக்குநர் பாலா இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

சுரேஷ் காமாட்சி பேட்டி: படத்தின் டீசர் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இயக்குநர் பாலா ஒரு வியாபாரி கிடையாது. அவர் நினைத்ததை ஸ்க்ரீனில் கொண்டு வருவதற்கு போராடும் ஒரு கலைஞர் அவர். பிற இயக்குநர் ஒரு காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தை வடிவமைத்தால் அது வெறும் போலீஸாக இருக்கும்.
பாலா அப்படி அல்ல: ஆனால் பாலா அப்படி இல்லை. அவர் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தை வடிவமைத்தால் அந்தக் கதாபாத்திரத்திற்கு என்று தனி பாடி லாங்குவேஜை உருவாக்குவார். அந்தக் கதாபாத்திரத்தின் முடி எப்படி இருக்க வேண்டும், வசனங்கள் எப்படி பேசப்பட வேண்டும் என்பதை பார்ப்பார். முக்கியமாக தனி மொழி நடையை அதற்கென்று உருவாக்குவார்.
நீண்ட நாள் ஆசை: இயக்குநர் பாலாவுடன் பணிபுரிய வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. அவர் ஷூட்டிங்கை இழுத்தடிப்பார் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை வேறு. அதவாது நாம் சரியாக இருந்துவிட்டால் அவரும் சரியாக இருப்பார். பாலாவுடன் எனக்கு எந்த ஒரு அசௌகரியமும் இல்லை. ஒரு நல்ல படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்போது நல்ல இயக்குநரை தேடி செல்வதில் எந்தவிதமான தவறும் இல்லை.
படம் வரும்போது பாருங்கள்: அவர் எப்படி உழைத்திருக்கிறார் என்பதை படம் வரும்போது பாருங்கள். அவரது தொழிலின் மீதும் திறமையின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அவர் வேண்டுமென்றே தயாரிப்பாளரின் பணத்தை செலவழிப்பவர் அல்ல. இங்கு ரிலேஷன்ஷிப் என்பது கண்ணாடி மாதிரிதான். நாம் அழுதால் அதுவும் அழும். நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும். பாலாவும் சிம்புவும் போல ஒரு குழந்தைதான். நிறைய வீடியோக்களில் அவர் அடிப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது.
சாதுவான ஆள்: பாலா எல்லோரையும் அடிப்பார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமே கிடையாது. அவர் மிகவும் சாதுவான ஒரு ஆள் அவர் கமர்ஷியலாக பணம் சம்பாதித்து இருக்கு வேண்டும் என்று நினைத்திருந்தால் எவ்வளவோ சம்பாதித்திருக்கலாம். அவருடைய கம்பேக் படமாக வணங்கான் திரைப்படம் கண்டிப்பாக இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











