பாலா கம்பேக் எல்லாம் கிடையாது.. சூர்யா கிரேட் எஸ்கேப்.. வணங்கான் காட்சியை பார்த்து கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது. முதலில் இந்த படத்தை சூர்யா தயாரித்து நடித்து வந்தார். ஆனால், பாலாவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து அதிரடியாக விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே சியான் விக்ரமின் மகன் அறிமுகமான வர்மா படத்தையும் பாலா படுமோசமாக இயக்கியிருந்தார் என்றும் புதிதாக ஆதித்ய வர்மா என இயக்குநரையே மாற்றி அர்ஜுன் ரெட்டி ரீமேக்கை செய்து வெளியிட்டனர். ஆனால், அந்த படமும் ஓடவில்லை.

இந்நிலையில், வணங்கான் படமும் தேறாது எனக் கூறப்பட்ட நிலையில், திடீரென படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சூர்யா வருகை தந்து ஒட்டுமொத்த கவனத்தையும் அந்த படத்தின் மீது குவித்தார். நாளை படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வெளியாக வேண்டிய ஸ்நீக் பீக் காட்சி தற்போது வெளியாகி அதற்கு மாறான வேலையை பார்த்து வருகிறது.
ஷங்கர் vs பாலா: ஜனவரி 10ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படமும் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் படமும் வெளியாகிறது. நேசிப்பாயா மற்றும் காதலிக்க நேரமில்லை படங்கள் ஜனவரி 14ம் தேதியும் விஷாலின் மத கஜ ராஜா படம் ஜனவரி 12ம் தேதியும் வெளியாகின்றன. பாலா மற்றும் ஷங்கர் இடையே நாளை நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வணங்கான் ஸ்நீக் பீக்: பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், சற்றுமுன் அந்த படத்தின் பிரத்யேக காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. காவல் நிலையத்தில் அருண் விஜய்யை அடைத்து வைக்க அவரை வெளியே கொண்டு வர இரு சர்ச் பாதிரியார்கள் வந்து போலீசிடம் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. பாலாவின் இயக்கத்தை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் நான் கடவுள், அவன் இவன் காலத்து மேக்கிங் என கலாய்த்து வருகின்றனர்.

சூர்யா எஸ்கேப்: மேலும், வணங்கான் படத்தின் சீனை பார்த்த சூர்யா ரசிகர்கள் பாலா கம்பேக் எல்லாம் இந்த படத்தின் மூலம் கொடுக்கமாட்டார். சூர்யா தான் கிரேட் எஸ்கேப் இல்லை என்றால் கங்குவாவை தொடர்ந்து இந்த படத்தை வைத்தும் நெட்டிசன்கள் வச்சு செய்திருப்பார்கள் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











