Pongal Box Office Winner: வணங்கான் முதல் நேசிப்பாயா வரை.. 2025ம் ஆண்டு பொங்கல் வின்னர் யாரு?

சென்னை: இந்த ஆண்டு தெலுங்கில் சங்கராந்தியை முன்னிட்டு கேம் சேஞ்சர், டாக்கு மகராஜ், சங்கராந்தி வஸ்துனம் உள்ளிட்ட 3 பெரிய படங்கள் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் பாலா இயக்கத்தில் வணங்கான், சுந்தர். சி இயக்கிய மத கஜ ராஜா, கிருத்திகா உதயநிதியின் காதலிக்க நேரமில்லை மற்றும் விஷ்ணுவர்தனின் நேசிப்பாயா என 4 படங்கள் வெளியாகின.

4 இயக்குநர்களும் திறமையான இயக்குநர்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அவர்கள் இயக்கிய படங்களில் நடித்த நடிகர்கள், ஸ்டார் காஸ்ட், கதை, பாக்ஸ் ஆபீஸ் வெற்றி உள்ளிட்டவை தான் இந்த பொங்கல் வெற்றியாளரை தீர்மானிக்கிறது.

kadhalikka neramillai box office nesippaya box office pongal 2025

காதலர் தினத்துக்கு வரவேண்டிய படங்கள் எல்லாம் பொங்கல் போட்டியில் பங்கேற்ற நிலையில், அந்த படங்களுக்கு மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பு கிடைக்காமல் போய் விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனவரி 10 வெளியான வணங்கான்: ஜனவரி 10ம் தேதி முதல் நேற்று காணும் பொங்கல் விடுமுறை வரை தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்திய படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படம் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்துடன் வெளியானது. கடந்த 7 நாட்களில் இதுவரை வணங்கான் திரைப்படம் 6.3 கோடி ரூபாயை இந்தியளவில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜனவரி 12 வெளியான மத கஜ ராஜா: சுந்தர். சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் 12 ஆண்டுகள் லேட் ரிலீஸாக வெளியானாலும் இந்த 2025ம் ஆண்டின் பொங்கல் வின்னராக மத கஜ ராஜா படம் மாறியிருக்கிறது. காணும் பொங்கலுக்கும் கலெக்‌ஷனை இந்த படம் அள்ளிய நிலையில், இதுவரை 25 கோடி ரூபாய் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறைகளில் 40 முதல் 50 கோடி வரை வசூல் செய்யும் என்கின்றனர்.

kadhalikka neramillai box office nesippaya box office pongal 2025

காதலிக்க நேரமில்லை வசூல்: பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியான ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியிருந்தார். நித்யா மேனன், வினய், டிஜே பானு, யோகி பாபு, லால் உள்ளிட்ட பலர் நடித்த அந்த படம் இதுவரை 4.84 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

kadhalikka neramillai box office nesippaya box office pongal 2025

நேசிப்பாயா வசூல்: விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான நேசிப்பாயா திரைப்படம் இதுவரை 60 முதல் 80 லட்சம் மட்டுமே வசூல் செய்திருக்கும் என்றும் இன்னமும் 1 கோடி வசூலை கூட அந்த படம் தொடவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்னும் 3 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில், அனைத்து படங்களும் கூடுதல் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொங்கல் சுந்தர். சி - விஷால் கூட்டணிக்கு வெற்றி பொங்கலாக மாறியுள்ளதை யாருமே மறுக்க முடியாது. ஆனால், கோலிவுட்டுக்கு ஒட்டுமொத்தமாக பெரிய பாக்ஸ் ஆபிஸ் லாபம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X