வானவராயன்... வல்லவராயன் படத்தில் சவுகார் ஜானகி...

By Mayura Akilan

வானவராயர் வல்லவராயன் படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சவுகார் ஜானகி நடித்திருக்கிறார்

குங்குமப்பூவூம் கொஞ்சும்புறாவும் படத்தை இயக்கிய ரா‌ஜ் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார். சகோதரர்கள் இருவரைப் பற்றிய கதை.

கிருஷ்ணா, மோனல் கஜ்ஜார், மா.கா.பா.ஆனந்த் நடித்துள்ள வானவராயன் வல்லவராயன் கடந்த இரண்டு வருடங்களாக தயாரிப்பில் உள்ளது.

அண்ணன் தம்பிகள்

அண்ணன் தம்பிகள்

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜுமோகன் கூறியதாவது: ஒரே தட்டில் சாப்பிடும் அண்ணன் தம்பிகளை பார்த்திருக்கிறோம். இது ஒரு தட்டுக்காக அடித்துக் கொள்ளும் அண்ணன் தம்பி கதை.

மா.பா.க ஆனந்த்

மா.பா.க ஆனந்த்

அண்ணனாக மா.பா.கா ஆனந்தும், தம்பியாக கிருஷ்ணாவும் நடித்திருக்கிறார்கள். அதே பாசத்திலும் அடித்துக் கொள்வார்கள். அவர்கள் எப்போது சந்தோஷமாக இருப்பார்கள், எப்போது சண்டை போடுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.

காதலில் ஜெயிக்க வைக்க

காதலில் ஜெயிக்க வைக்க

30 முறை காதலில் தோற்ற கிருஷ்ணாவுக்கு மோனல் கஜ்ஜாரை அண்ணன் ஆனந்த் எப்படி கோர்த்து விடுகிறார் என்பதை காமெடியாக காட்டும் படம்.

கல்யாணப்பாடல்

கல்யாணப்பாடல்

படம் ஆரம்பம் முதல் கடைசிவரை காமெடிதான். திருமண மண்டபங்களில் "மணமகளே மருமகளே வா வா" என்ற பாடல் மட்டுமே ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இனி வானவராயன் வல்லவராயன் படத்தில் இடம் பெரும் வாங்கம்மா ....வாங்கப்பா வாங்கண்ணே ....வாங்கத்தே வா மாமா...என்ற உறவுகள் அனைவரையும் கல்யாணத்திற்கு அழைக்கும் பாடலும் கேட்க ஆரம்பிக்கும்.

2 .5 லட்சத்திற்கு பூ செலவு

2 .5 லட்சத்திற்கு பூ செலவு

இந்த பாடல்காட்சி ஒரு திருமண மண்டபத்தில் படமாக்கப் பட்ட போது அலங்காரத்திற்காக தினமும் 50,000 ரூபாய் செலவில் மலர் வாங்கப்பட்டு திருமண மேடை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. பூ வாங்க மட்டும் 2,50,OOO செலவு செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.

நடிகர் கிருஷ்ணா கொங்கு தமிழை முறைப்படி பயிற்சி எடுத்து பேசி அசத்தி இருக்கிறார்'' என்கிறார் இயக்குனர் ராஜமோகன்.

நீண்ட நாள் தயாரிப்பு

நீண்ட நாள் தயாரிப்பு

கிருஷ்ணா அதற்கு பிறகு நடித்த யாமிருக்க பயமே வெளிவந்து விட்டது. அடுத்து வன்மம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வானவராயன் வல்லவராயன் படத்தை கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் தன் நண்பர் ஒருவருடன் இணைந்து தயாரித்தார்.

இம்மாதம் ரிலீஸ்

இம்மாதம் ரிலீஸ்

தற்போது படத்தை டாக்டர் சிவபாலன் என்பவர் தனது ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்துக்காக வாங்கி விட்டார். ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.

சவுகார் ஜானகி

சவுகார் ஜானகி

நீண்ட வருடங்களுக்கு பிறகு சவுகார் ஜானகி நடித்திருக்கிறார். படத்தை பார்த்த டாக்டர் எல்.சிவபாலன் படத்தை மொத்தமாக வாங்கி விட்டார். என்று கூறியுள்ளார் ராஜுமோகன்.

சந்தானம், தம்பி ராமையா

சந்தானம், தம்பி ராமையா

இந்த படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். கதாநாயகியாக மோனல் கஜ்ஜார் நடிக்கிறார். மற்றும் சந்தானம்,சௌகார்ஜானகி,S.P.B.சரண், தம்பி ராமைய்யா, கோவைசரளா , ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணா,பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் கலைஞர்கள்

தொழில் நுட்பக் கலைஞர்கள்

ஒளிப்பதிவு - பழனிகுமார், சினேகன் பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், நடனம் - தினேஷ் , ராபர்ட்,எடிட்டிங் - கிஷோர், கலை - ரெமியன், ஸ்டன்ட் - ரமேஷ், தயாரிப்பு - கே. எஸ். மதுபாலா, கதை , திரைக்கதை, வசனம், இயக்கம் - ராஜமோகன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X