‘என்னை நம்பி கெட்டவங்க யாருமில்ல.. ஆனா நம்பாம கெட்டவங்க நிறைய பேர்’.. ரிலீசானது ‘விஆர்வி’ டிரெய்லர்!
வந்தா ராஜாவா தான் வருவேன் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சென்னை: சிம்பு நடித்துள்ள 'வந்தா ராஜாவா தான் வருவேன்' பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு, மஹத், மேஹா ஆகாஷ், கேத்ரின் தெரசா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் வந்தா ராஜாவா தான் வருவேன். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.
ஏற்கனவே, இந்த டிரெய்லர் கடந்த 29ம் தேதி 2.0 படத்தோடு இணைந்து வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொன்னபடி டிரெய்லர் வெளியாகவில்லை, டீசர் மட்டும் வெளியிடப்பட்டது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் ரிலீசால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
"என்ன நம்பி கெட்டவங்க யாருமில்ல. ஆனா, நம்பாம கெட்டவங்க நிறைய பேர்" என்ற டயலாக்குடன் தான் டிரெய்லர் ஆரம்பிக்கிறது. சிம்பு படங்களுக்கே உரித்தான ரொமான்ஸ் காட்சிகளுக்கு இப்படத்திலும் பஞ்சமிருக்காது என்பது டிரெய்லரைப் பார்த்தாலே தெரிகிறது.
படத்தில் குறுந்தாடியுடன் ஸ்டைலிசான கெட்டப்பில் சிம்பு வருகிறார். சிம்பு படங்களுக்கே உரித்தான காமெடி, ஆக்சன், காதல் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











