பொங்கலுக்கு மட்டும் அல்ல 29ம் தேதியும் ரஜினியுடன் வரும் சிம்பு: மாஸ் தான் போங்க
Recommended Video

பொங்கலுக்கு ரிலீஸாகும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம்- வீடியோ
சென்னை: சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் பட டீஸரை 2.0 படத்துடன் சேர்த்து வெளியிட முயற்சி செய்து வருகிறது லைகா நிறுவனம்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வந்தா ராஜாவாதான் வருவேன். அந்த படம் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களுடன் சேர்ந்து பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் டீஸர் ப்ரொமோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிம்பு மாஸாக நடந்து வரும் அந்த ப்ராமோ வீடியோவின் இறுதியில் டீஸர் வரும் 29ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.0 படத்தையும் லைகா தான் தயாரித்துள்ளது. அதனால் அந்த படத்தின் இடையே வந்தா ராஜாவாதான் வருவேன் டீஸரை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம்.
ஆக, பொங்கலுக்கு மட்டும் இல்லை 29ம் தேதியும் சூப்பர் ஸ்டாருடன் வருகிறார் யங் சூப்பர் ஸ்டார்.
Comments


Click it and Unblock the Notifications