சிம்புனா விட்ருவோமா.. வழக்கம்போல் தன் ‘வேலை’யைக் காட்டிய தமிழ்ராக்கர்ஸ்!
சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
Recommended Video

சென்னை: சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தை இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டுள்ளது தமிழ்ராக்கர்ஸ்.
சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது வந்தா ராஜாவாத்தான் வருவேன் படம். ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், கேதரின் தெரசா, மேகா ஆகாஷ் மற்றும் மகத் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் ரிலீசாகியுள்ளது. சிம்பு ரசிகர்கள் அவரது கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும், தியேட்டர்களுக்கு வருபவர்களுக்கு பால் தானமாக தந்தும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சிம்பு ரசிகர்களுக்கும், படக்குழுவிற்கும் அதிர்ச்சி தரும் வகையில் தமிழ்ராக்கர்ஸ் இப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களை ரிலீஸ் அன்றே இணையத்தில் ரிலீஸ் செய்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது தமிழ்ராக்கர்ஸ். தற்போது அந்தப் பட்டியலில் வந்தா ராஜாவாத்தான் வருவேனும் இணைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











