ஸ்ரீகாந்த் எனக்கு மச்சான்... எங்களுக்குள்ள சூப்பர் கெமிஸ்ட்ரி: நமீதா
ஸ்ரீகாந்த் என் மச்சான், எங்க ரெண்டு பேருக்கும் இடையே சூப்பர் கெமிஸ்ட்ரி இருக்கு என்று நமீதா கூறியுள்ளார்.
நமீதாவின் இந்த ஸ்டேட்மெண்ட் ஸ்ரீகாந்த்தின் மனைவி வந்தனாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஸ்ரீகாந்த், சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ள படம் நம்பியார். கணேஷா என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சரத்குமார், சூர்யா, சமுத்திரகனி, ஆர்.கண்ணன், ஜீவா, ஷாம், நமீதா, சுனைனா உள்பட பலர் பங்கேற்றனர்.

என்னோட மச்சான்
விழாவில் பேசிய நமீதா, எடுத்த எடுப்பிலேயே ஸ்ரீகாந்த்தான் என் மச்சான் என்றார். எப்பொழுதுமே நமீதா மச்சான் என்று அழைத்துவிட்டுத்தான் பேச ஆரம்பிப்பார். இந்த விழாவில் ஸ்ரீ காந்த் என்னோட மச்சான் என்று குறிப்பிட்டது அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வந்தனாவின் அதிர்ச்சி
விழா மேடையில் நின்று கொண்டிருந்த ஸ்ரீகாந்தின் மனைவியும், நம்பியார் படத்தின் தயாரிப்பாளருமான வந்தனா ஸ்ரீகாந்த் அதிர்ந்து போனார்.

ஜாலி ஜோடி
தொடர்ந்து பேசிய நமீதா, ஸ்ரீகாந்தும், நானும் இந்திர விழா, பம்பரக்கண்ணாலே போன்ற படங்களில் நடித்திருக்கிறோம். அப்போதெல்லாம் ஸ்பாட்டில் ரொம்ப ஜாலியாக இருப்போம் என்றார்.

பாசிட்டிவ் மனிதர்
ஸ்ரீகாந்திடம் பேசிக்கொண்டிருந்தால் என்னையுமறியாமல் ஒருவித எனர்ஜி எனக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும். அந்த அளவுக்கு பாசிட்டீவாக பேசுவார் ஸ்ரீகாந்த்.

கெமிஸ்ட்ரி சூப்பர்
ரொமான்ஸ் காட்சிகளில் எங்களுக்கிடையே நல்ல கெமிஸ்ட்ரியும் அந்த படங்களில் இருந்தது. அதேபோல், இந்த படத்தில் சுனைனாவுடனும் அவர் நடித்திருக்கிறார். அது பாடல்களிலேயே தெரிகிறது என்றார் நமீதா.


Click it and Unblock the Notifications











