போங்க மச்சான் போங்க சும்மா பொத்திக்கிட்டு போங்க: சிம்பு ராக்ஸ்
Recommended Video

சென்னை: சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் வாங்க மச்சான் வாங்க பாடல் ரிலீஸாகியுள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். படம் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.

பட ரிலீஸையொட்டி பெரிய பெரிய கட்அவுட்டுகள் வைத்து அண்டாவில் பால் ஊற்றுமாறு சிம்பு தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வந்தா ராஜாவாதான் படத்தில் வரும் வாங்க மச்சான் வாங்க பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது.
அறிவித்தபடி பாடலை வெளியிட்டுள்ளது. வாங்க மச்சான் வாங்க என்று நல்லபடியாக துவங்கும் பாடலில் போங்க மச்சான் போங்க சும்மா பொத்திக்கிட்டு போங்க சீனு கீனு வுட்டாக்கா செஞ்சிடுவோம் நாங்க என்று வருகிறது. நல்லா இருக்கு பாஸ் உங்க பாட்டு.
முன்னதாக வெளியான எனக்கா ரெட் கார்டு பாடல் லிரிக்கல் வீடியோவை பார்த்தவர்கள் அது சிம்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளது போன்று உள்ளது என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











