Vadivelu: ரெண்டு பேரா மாமி.. சுந்தர். சி படத்தில் சூப்பர் சம்பவம்.. அந்த ஹீரோயினும் ஆன் போர்டாம்!
சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் பிரசாந்த், கிரண் நடித்து வெளியான வின்னர் படத்தில் கைபுள்ள கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலுவை ரசிகர்கள் எப்போதுமே மறக்கமாட்டார்கள். காமெடி நடிகர் வடிவேலு ஏகப்பட்ட கெட்டப்புகளை போட்டு நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக சிரிக்க வைத்து வருகிறார்.
தலைநகரம் நாய் சேகர், நகரம் மறுபக்கம் உள்ளிட்ட படங்களில் வடிவேலு நடித்த காமெடி காட்சிகள் எல்லாம் எவர்க்ரீன் ஹிட். பல வருடங்கள் கழித்து மனதில் இருந்த பழைய பகையையெல்லாம் மறந்து விட்டு சுந்தர். சி இயக்கத்தில் வடிவேலு மீண்டும் நடித்து வருகிறார். அரண்மனை 4 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி ஜெட் வேகத்தில் படங்களை இயக்கி வருகிறார்.

சந்தானத்துடன் சுந்தர். சி மீண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வடிவேலுவை வைத்து கேங்கர்ஸ் எனும் படத்தை இயக்கி இறுதி கட்ட படப்பிடிப்பையே சுந்தர் சி முடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடிவேலு - சுந்தர் சி: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் தடைகளை உடைத்து எறிந்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் சிறந்த நடிகராக மாறினார். பகத் ஃபாசிலுடன் இணைந்து மாரீசன் படத்தில் நடித்து வரும் வடிவேலு சுந்தர் சி இயக்கத்தில் செம ஜாலியாக கேங்கர்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
2 ஹீரோயின்கள்: கேங்கர்ஸ் படமே கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன. வடிவேலுவுக்கு ஜோடியாக இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் நடித்துள்ளதாக கோடம்பாக்கத்தில் தற்போது 2 பேரா மாமி என வடிவேலு - சுந்தர் சி படக் காமெடியை வைத்தே கலாய்த்து வருகின்றனர்.
கேத்தரின் தெரசா: சியான் விக்ரமை வைத்து ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் நடித்த சதா வடிவேலுவுக்கு ஜோடியாக எலி படத்தில் நடித்தார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஷிவானி நாராயணன் நடித்திருந்தார். இந்நிலையில், கேங்கர்ஸ் படத்தில் கேத்தரின் தெரசா வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறுகின்றனர். பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் கேத்தரின் தெரசா தேர்வு செய்த படங்கள் சரியாக போகாத நிலையில், அவரது மார்க்கெட் சரிந்து விட்டது.
வாணி போஜன்: யோகி பாபுவுக்கு ஜோடியாக சமீபத்தில் ஓடிடியில் வெளியான சட்னி சாம்பார் வெப்சீரிஸில் நடித்த வாணி போஜனும் தற்போது வடிவேலுவின் கேங்கர்ஸ் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுந்தர் சி படங்கள் என்றாலே அழகழகான ஹீரோயின்களும் கவர்ச்சி காட்சிகளும் இடம்பெறுவது வழக்கம் தானே என்றும் வடிவேலுவின் கேங்கர்ஸ் திரைப்படமும் கலர்ஃபுல்லாகவும் இளைஞர்களை கவரும் விதமாகவும் இருக்கும் எனக் கூறுகின்றனர்.
மூக்குத்தி அம்மன் 2: அரண்மனை 4 படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர். சி இயக்கத்தில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகப் போவதாக வேல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நடிகை நயன்தாரா இந்த 2ம் பாகத்திலும் அம்மனாக நடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி மாசாணி அம்மன் எனும் படத்தை த்ரிஷாவை வைத்து வேறொரு தயாரிப்பு நிறுவனத்தில் இயக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











