கேசினோ படத்தில் வாணி போஜன் ரோல் என்ன தெரியுமா? வேற லெவல் த்ரில்லரா உருவாகுதாம்!

சென்னை: சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்டு வந்த வாணி போஜன், இப்போ வெள்ளித்திரையிலும் தொடர்ந்து நல்ல நல்ல படங்களாக நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் வாணி போஜன்.

அறிமுக இயக்குநர் மார்க் ஜோயலின் கேசினோ படத்தில் மாயா எனும் கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

தெய்வமகள், ஆஹா, லக்‌ஷ்மி வந்தாச்சு என ஏகப்பட்ட சீரியல்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் நன்றாகவே பிரபலமானவர் வாணி போஜன். சின்னத்திரையில் லீடு ஹீரோயினாக நடித்து அசத்தி வந்த வாணி, ஏகப்பட்ட விளம்பரங்களிலும் மாடலாக நடித்து வந்தார். சீரியலில் இருந்து சினிமாவுக்கு தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

இந்த ஆண்டு வெளியான வெகு சில படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டான படம் என்றால் அது ஓ மை கடவுளே தான். அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமானார் வாணி போஜன். சீரியலில் நடித்து சினிமாவுக்குள் வந்ததால், தமிழில் அறிமுக படத்திலேயே தனது மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தினார்.

லாக்கப் படத்தில்

லாக்கப் படத்தில்

ஓ மை கடவுளே படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை வாணி போஜனுக்கு ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. வெங்கட் பிரபு, வைபவ் நடிப்பில் இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் வெளியான லாக்கப் படத்தில் நாயகியாக நடித்து கலக்கினார் வாணி போஜன்.

கேசினோவில் என்ன கேரக்டர்

கேசினோவில் என்ன கேரக்டர்

இந்நிலையில், வாணி போஜன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் கேசினோ. அறிமுக இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் மாயா எனும் கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெயருக்கு ஏற்றார் போலவே அவருக்கு இந்த படத்தில் மிஸ்டரியான கதாபாத்திரமாம்.

Recommended Video

Dalgona Coffee Challenge | Quarantine | Aiswarya Rajesh | Vani Bhojan | Swarnamalya
ஹீரோ யார்

ஹீரோ யார்

மெஹந்தி சர்கஸ் மற்றும் பெண்குயின் படங்களில் நடித்து பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். வழக்கமான ஹீரோ, ஹீரோயினாக இவர்கள் இல்லாமல், ஒவ்வொருவருக்கும் ஒரு க்ரே ஷேட்ஸ் இருக்கும் என இயக்குநர் மார்க் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

விஜய் பட இயக்குநர்

விஜய் பட இயக்குநர்

மேலும், இந்த படத்தில் தளபதி விஜய்யின் சச்சின் படத்தை இயக்கிய இயக்குநர் ஜான் மகேந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். சமீபத்தில் பூஜை போட்டு படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது. அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X