சபாஷ் சரியான போட்டி.. மீண்டும் மல்லுக்கட்டும் பிரியா – வாணி!
சென்னை: சீரியலைப் போலவே சினிமாவிலும் பிரியா பவானி சங்கருக்கும், வாணி போஜனுக்கும் போட்டி ஆரம்பித்துள்ளது.
செய்தி வாசிப்பாளராக இருந்து விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியும் கொடுத்துள்ளன.

இந்தியன் 2 வில் கமலுடன் நடித்து வரும் இவர், இந்தியனில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, விஷ்ணு விஷாலுடன் ஒரு படம் என படு பிசியாக இருக்கிறார் பிரியா.

இவர் சீரியலில் நடித்தபோது சமகாலத்தில் இவருக்கு போட்டியாளராக இருந்தவர் வாணிபோஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் மூலம் பிரபலமானவர். பிரியா ஒரே சீரியலுடன் சினிமாவில் அறிமுகமாக, சன் டிவி தெய்வ மகள், ஜி தமிழில் 'லட்சுமி வந்தாயிற்று' விஜய் டி.வி 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்' நிகழ்ச்சியில் நடுவர் என எல்லாச் சேனல்களிலும் ஒரு ரவுண்ட் வந்த வாணி போஜன், அசோக் செல்வன், 'இறுதிச்சுற்று' ரித்திகா சிங் நடித்துள்ள 'ஓ மை கடவுளே' படத்தில் இரண்டாவது கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் மீக்கு மாத்ரமே செப்தா படம், வைபவுடன் லாக்கப் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது போக புதிய தமிழ்ப்படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார் வாணி. இதை அவரே இன்ஸ்டாகிராமில் உறுதி செய்திருக்கிறார். இந்த படத்தை குறும்பட இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்குகிறார்.
இவரது குறும்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் பெஞ்ச் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டது. மேயாத மான் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











